நேபாளத்தில் உள்ள இலங்கையர்களுக்கு தூதுரகம் விடுத்துள்ள அவசர அறிவிப்பு
இந்த வெள்ளப்பெருக்கு திமுரே மற்றும் சியாப்ருபேசி பகுதிகளில் கணிசமான சேதங்களை ஏற்படுத்தியுள்ளதுடன், போட்டே கோஷி மற்றும் திரிசூலி ஆறுகளின் கீழ்நிலைப் பகுதிகளிலும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
திபெத்தியப் பகுதியிலிருந்து போட்டே கோஷி ஆற்று வழியே ரசுவா மாவட்டத்திற்குள் திடீரெனப் புகுந்த ஆற்றுநீரால் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து, நேபாளத்தில் உள்ள இலங்கையர்களுக்கு காத்மண்டுவில் உள்ள இலங்கைத் தூதரகம் அவசரப் பாதுகாப்பு வழிகாட்டலை வெளியிட்டுள்ளது.
இந்த வெள்ளப்பெருக்கு திமுரே மற்றும் சியாப்ருபேசி பகுதிகளில் கணிசமான சேதங்களை ஏற்படுத்தியுள்ளதுடன், போட்டே கோஷி மற்றும் திரிசூலி ஆறுகளின் கீழ்நிலைப் பகுதிகளிலும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
ரசுவா, நுவாகோட், தாடிங், கோர்கா, சித்வான் மற்றும் ஆற்றங்கரைப் பகுதிகளில் உள்ள இலங்கையர்கள், ஆறுகள், ஆற்றங்கரைகள், பாலங்கள் மற்றும் தாழ்வான பகுதிகளுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறும், உள்ளுர் அதிகாரிகள் மற்றும் பாதுகாப்புப் படைகளின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குப் பயணம் செய்யத் திட்டமிட்டுள்ளவர்கள், வெள்ள அபாயம் தணிந்து, வீதிகள் பாதுகாப்பானவை என்று உறுதிப்படுத்தப்படும் வரை தங்களது பயணங்களை ஒத்திவைக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
அவசர உதவி தேவைப்படும் இலங்கை குடிமக்கள், தூதரகத்தின் 24 மணி நேர அவசர தொலைபேசி இலக்கமான +9851048653 அல்லது slemb.kathmanduShmfa.gov.lk என்ற மின்னஞ்சல் முகவரி மூலம் தொடர்புகொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.





