முன்னாள் கடற்படை தளபதி கரன்னகொடவுக்கு பிணை
அவர் ஆணைக்குழுவில் வாக்குமூலம் அளிக்க ஆஜரானபோது, கைது செய்யப்பட்டு கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
2006ஆம் ஆண்டில் இலங்கை கடற்படையின் நிர்வாகப் பிரிவில் யோஷித ராஜபக்ஷவை ஆட்சேர்ப்பு செய்ததில் ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளான முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த குமார ஜயதேவ கரன்னகொடவை பிணையில் விடுவிக்க கொழும்பு பிரதான நீதிபதி அசங்க எஸ். போதரகம 03-07-2026 அன்று உத்தரவிட்டார்.
தேவையான ஆட்சேர்ப்புத் தகுதிகளைப் பூர்த்தி செய்யாத யோஷித ராஜபக்ஷ, நிர்வாகப் பிரிவில் ஆட்சேர்ப்பு செய்யப்பட்டதாக அந்த முறைப்பாட்டில் கூறப்பட்டுள்ளது. மேலும், ஆட்சேர்ப்பு நடைமுறைக்கு மாறாக, அவர் அரசாங்க செலவில் ஐக்கிய இராச்சியத்தில் உள்ள பிரித்தானிய ரோயல் கடற்படைக் கல்லூரிக்கு பயிற்சிக்கு அனுப்பப்பட்டதாகவும் முறைப்பாட்டில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
நீதிபதி, வசந்த கரன்னகொடவை 2.5 மில்லியன் ரூபா மதிப்புள்ள தலா இரண்டு பிணையில் விடுவிப்பதற்கு உத்தரவிட்டதோடு, அவருக்கு பயணத் தடையையும் விதிக்கப்பட்டது.
நீதிபதி, மேற்படி உத்தரவைப் பிறப்பிக்கும்போது, விசாரணைகள் இன்னமும் நடைபெற்று வருகின்றன என்றவொரு காரணம் மட்டுமே சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்கப் போதுமானதல்ல என்று நீதிபதி சுட்டிக்காட்டினார்.
சந்தேக நபர் சாட்சிகளைப் பாதிக்கவோ அல்லது விசாரணைகளைத் தடுக்கவோ முயன்றார் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்றும், அவரை மேலும் காவலில் வைக்க அரச தரப்பு போதுமான காரணங்களை முன்வைக்கத் தவறிவிட்டது என்றும் நீதிமன்றம் கருதுவதாக நீதிபதி குறிப்பிட்டார்.
இந்த வழக்கில் முதல் சந்தேக நபரான யோஷித ராஜபக்ஷ, கடற்படைப் பணியாளர்களைச் சேர்ப்பது மற்றும் வெளிநாட்டுப் பயிற்சி வழங்குவது தொடர்பான விசாரணையின் தொடர்பில், இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவால் ஜூன் 17ஆம் திகதி அன்று கைது செய்யப்பட்டார்.
அவர் ஆணைக்குழுவில் வாக்குமூலம் அளிக்க ஆஜரானபோது, கைது செய்யப்பட்டு கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
நீதிபதி, யோஷித ராஜபக்ஷவை தலா 5 மில்லியன் ரூபா மதிப்புள்ள மூன்று சரீரப் பிணைகளில் விடுவிக்கவும், அவருக்கு பயணத்தடை விதித்து கடவுச்சீட்டை நீதிமன்றத்தில் ஒப்படைககுமாறு நீதிபதி உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.





