முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகள் இரத்து: வர்த்தமானியில் சட்டமூலம்
இந்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்ட நாளில் இருந்து பின்வரும் உரித்துரிமைகள் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதிகள் உரித்துரிமைகள் சட்டத்தை ரத்து செய்வதற்கான சட்டமூல வரைவு வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, இந்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்ட நாளில் இருந்து பின்வரும் உரித்துரிமைகள் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு வழங்கப்பட்ட விசேட சலுகைகளை இரத்து செய்யும் வகையில், ஜனாதிபதியின் உரித்துரிமைகள் சட்டத்தை ரத்து செய்வதற்கான சட்டமூலத்திற்கு அமைச்சரவை அண்மையில் அனுமதி வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
1986 ஆம் ஆண்டின் 4 ஆம் இலக்க சனாதிபதிகளின் உரிமைகள் (இல்லாதொழித்தல்) சட்டமூலத்தை பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பித்தல்
'வளமான நாடு - அழகான வாழ்க்கை' என்னும் அரசாங்கத்தின் கொள்கை பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு முன்னாள் சனாதிபதிகளுக்கும் அவர்களுடைய குடும்பங்களுக்கும் வழங்கப்படும் விசேட சிறப்புரிமைகளை இல்லாதொழிப்பதற்கு இயலுமாகும் வகையில் 1986 ஆம் ஆண்டின் 4 ஆம் இலக்க ஜனாதிபதிகளின் உரிமைகள் சட்டத்தை நீக்குவதற்கு சட்டமூலமொன்றை தயாரிக்கும் பொருட்டு 20250616 ஆம் திகதியன்று நடத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டங்களில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
அதற்கிணங்க இந்த நோக்கம் கருதி சட்டவரைநரினால் சனாதிபதிகளின் உரிமைகள் (இல்லாதொழித்தல்) சட்டமூலமானது தயாரிக்கப்பட்டுள்ளதோடு, அதன் பொருட்டு சட்டமா அதிபரின் உடன்பாடு கிடைக்கப்பெற்றுள்ளது. இந்த சட்டமூலத்தை அரசாங்க வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கும் அதன் பின்னர் அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்குமாக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.