இந்திய ஒப்பந்தத்துக்கு எதிரான மனுக்கள் தள்ளுபடி
மனுதாரர்கள் சார்பாக ஜனாதிபதி சட்டத்தரணி மனோகர டி சில்வா மற்றும் சிரேஷ்ட சட்டத்தரணி கனிஷ்க விதாரண ஆகியோர் ஆஜரானார்கள்.
இந்தியாவுடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை செல்லுபடியற்றது என அறிவித்து உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட இரண்டு அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் உயர் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டன.
நீதியரசர்களான அச்சல வெங்கப்புலி மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர் அடங்கிய உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு, இந்த மனுக்கள் ஊடாக எந்த அடிப்படை வழக்கு விடயமும் முன்னிறுத்தப்படவில்லை என்று கூறி இந்த இரண்டு மனுக்களையும் தள்ளுபடி செய்ய 04-08-2025அன்று முடிவு செய்தது.
பாதுகாப்பு ஒத்துழைப்பு, வெற்றிகரமான டிஜிட்டல் தீர்வுகளைப் பகிர்ந்து கொள்வது மற்றும் கிழக்கு மாகாணத்திற்கான பல்துறை மானிய உதவி குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம் உள்ளிட்ட இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான ஏழு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கடந்த ஏப்ரல் 5 ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கு இடையே பரிமாறப்பட்டன.
மனுதாரர்கள் சார்பாக ஜனாதிபதி சட்டத்தரணி மனோகர டி சில்வா மற்றும் சிரேஷ்ட சட்டத்தரணி கனிஷ்க விதாரண ஆகியோர் ஆஜரானார்கள். சட்டமா அதிபர் சார்பாக பிரதி சொலிசிட்டர் ஜெனரல் நிர்மலன் விக்னேஷ்வரன் ஆஜரானார்.





