நாட்டின் அரசியலமைப்புக்கு அமைய அரசாங்கம் செயற்பட வேண்டும்: மைத்திரிபால சிறிசேன
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை பாதுகாப்பதற்கு ஜனநாயக ரீதியில் அர்ப்பணிப்புடன் செயற்படுவோம்.அரசியல் என்ற நிலையில் வேறுபாடுகள் இருக்கலாம் ஆனால், நெருக்கடியான நிலையில் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.

அரசியல்வாதி ஒருவர் சிறைக்கு செல்லாவிடின் அவரது அரசியல் பயணம் முழுமையடையாது.நாட்டின் அரசியலமைப்புக்கு அமைய அரசாங்கம் செயற்பட வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
கொழும்பில் 24-08-2025 அன்று நடைபெற்ற எதிர்க்கட்சிகளின் ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,
எமது அரசியல் கொள்கைக்கு மத்தியில் நாங்கள் துயரமடைந்துள்ளோம். சிறைசென்றுள்ளோம். பல இன்னல்களுக்கு முகங்கொடுத்துள்ளோம். அரசியல்வாதி ஒருவர் சிறைக்கு செல்லாவிடின் அவரது அரசியல் பயணம் முழுமையடையாது. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரசிங்க கைது செய்யப்பட்டமை கவலையடைகிறோம்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை பாதுகாப்பதற்கு ஜனநாயக ரீதியில் அர்ப்பணிப்புடன் செயற்படுவோம்.அரசியல் என்ற நிலையில் வேறுபாடுகள் இருக்கலாம் ஆனால், நெருக்கடியான நிலையில் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.
நாட்டின் சட்டவாட்சி மற்றும் ஜனநாயகத்தை முன்னிலைப்படுத்திய வகையில் அரசாங்கம் செயற்பட வேண்டும்.ஜனநாயகத்தை பாதுகாக்க வேண்டுமாயின் அரசியலமைப்புக்கு அமைய அரசாங்கம் செயற்பட வேண்டும் என்றார்.