தற்போதைய ஜனாதிபதியும் நானும் பெரும்பான்மை இல்லாத ஆட்சியாளர்கள்: ரணில்
திசாநாயக்க 51% வாக்குகளைப் பெறத் தவறிவிட்டதாகவும், தானும் தற்போதைய ஜனாதிபதியும் பெரும்பான்மை இல்லாத ஜனாதிபதிகள் என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு தன்னைப் போன்றே பாராளுமன்ற பெரும்பான்மை இல்லை என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நீர்க்கொழும்பில் புதிய ஜனநாயக முன்னணியின் ஏற்பாட்டில் நேற்று (27) காலை இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
"நீங்கள் அவரது பட்டியலைப் பார்த்தால், அவரது அரசாங்கம் மூன்று மாதங்கள் அல்லது குறைந்தது மூன்று வாரங்கள் நீடிக்குமா என்பது எனக்குத் தெரியாது. நாடு இயங்குவதற்கு அனுபவசாலிகள் தேவை. அனுபவம் வாய்ந்தவர்களை முன்னிறுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம். அவருக்குப் பெரும்பான்மை இருந்தால் மட்டுமே அவர் குறைந்தது மூன்று ஆண்டுகள் நீடிக்க முடியும்" என்று முன்னாள் ஜனாதிபதி மேலும் கூறினார்.
"நான் தோற்றால் வீட்டிலேயே இருக்கச் சொல்கிறார்கள். நான் தோற்றுவிட்டேன், அதை நான் ஏற்றுக்கொள்கிறேன். நான் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டேன். பெரும்பான்மையானவர்கள் எனக்கு வாக்களிக்கவில்லை. எனவே நான் தோற்றேன். ஆனால் பெரும்பான்மையானவர்கள் அவருக்கு வாக்களிக்கவில்லை" என்று விக்ரமசிங்க கூறினார்.
திசாநாயக்க 51% வாக்குகளைப் பெறத் தவறிவிட்டதாகவும், தானும் தற்போதைய ஜனாதிபதியும் பெரும்பான்மை இல்லாத ஜனாதிபதிகள் என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
"நான் பெரும்பான்மை இல்லாத முன்னாள் ஜனாதிபதி. பெரும்பான்மை இல்லாத தற்போதைய ஜனாதிபதியாக அவர் உள்ளார். அது அவருக்கும் இல்லை, எனக்கும் இல்லை. அதுதான் சிறப்பு. நாம் இருவரும் ஒன்றுதான்" என்று ரணில் விக்கிரமசிங்க மேலும் தெரிவித்தார்.





