முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தனவின் மனைவிக்கு ஒக்டோபர் 6 வரை விளக்கமறியல்
இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தனவின் மனைவி, கொழும்பு மேலதிக நீதவான் அஸங்க எஸ். போதரம முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார்.
இலஞ்சம் வழங்கிய குற்றச்சாட்டு தொடர்பில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் 25-09-2026 அன்று சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தனவின் மனைவி சினாரி லக்மந்தி ஹெட்டியாரச்சியை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தனவின் மனைவி, கொழும்பு மேலதிக நீதவான் அஸங்க எஸ். போதரம முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார்.
கொழும்பு இலக்கம் 11 மேல் நீதிமன்றத்தில் முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தனவிற்கு எதிராக நிலுவையிலுள்ள வழக்கு ஒன்றில், நீதிபதி மூலம் இடைநிறுத்தப்பட்ட சிறைத்தண்டனையைப் பெற்றுத் தருமாறு கோரி, நீதிமன்ற அலுவலக ஊழியர் ஒருவருக்கு 50,000 ரூபா பணத்தை இலஞ்சமாக வழங்கிய குற்றச்சாட்டின் பேரில் இவர் கைது செய்யப்பட்டதாக நேற்றைய தினம் இலஞ்ச ஊழல் விசாரைணை ஆணைக்கு அதிகாரிகள் மன்றுக்கு தெரியப்படுத்திருந்தனர்.
இந்நிலையில் விசாரணை அதிகாரிகள் மற்றும் சந்தேகநபர் சார்பில் மன்றில் ஆஜரான சட்டத்தரணிகள் முன்வைத்த சாட்ச்சியங்களை பரிசீலித்த கொழும்பு நீதிவான் அஸங்க எஸ். போதரம எதிர்வரும் 6 ஆம் திகதிவரை சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பித்துள்ளார்.





