சிறந்த கட்டமைப்புக்காகவே மின்சாரசபை நான்கு நிறுவன அமைப்புக்களாகின்றன: ஜனாதிபதி அநுர
இலங்கை மின்சார சபை தொடர்பில் மக்கள் மத்தியில் நல்லதொரு நிலைப்பாடு கிடையாது.சுமார் 26 ஆயிரம் சேவையாளர்கள் மின்சார சபையில் உள்ளார்கள்.
இலங்கை மின்சார சபை தொடர்பில் மக்கள் மத்தியில் நல்லதொரு நிலைப்பாடு கிடையாது. சுமார் 26 ஆயிரம் சேவையாளர்கள் மின்சார சபையில் உள்ளார்கள். பிரச்சினைகள் உள்ளன. ஆனால் பிரச்சினைகளுக்கு பொறுப்புக் கூறுபவர்கள் எவருமில்லை. சிறந்த கட்டமைப்பை உருவாக்குவதற்காகவே மின்சார சபையை நான்கு நிறுவன கட்டமைப்பின் கீழ் கொண்டு வருவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. விருப்பமானவர்கள் சேவையாற்றலாம். விருப்பமில்லாதவர்கள் செல்லலான ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
கொலன்னாவ எண்ணெய் களஞ்சியசாலையில் புதிதாக 06 எண்ணெய் தாங்கிகளை நிர்மாணிக்கும் நிகழ்வில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,
வலுசக்தி துறை நாட்டின் பொருளாதாரத்தின் பிரதான அங்கமாகும்.ஆகவே வலுசக்தி துறையை அடிப்படையாகக் கொண்டே நாட்டின் பொருளாதாரத்தின் எதிர்காலம் தீர்மானிக்கப்படுகிறது. ஒருசில அரச நிறுவனங்களின் சேவையாளர்கள் அந்த நிறுவனங்கள் அவர்களுக்காகவே உருவாக்கப்பட்டது,அவர்களுக்காகவே செயற்படுகிறது என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
அரச நிறுவன மறுசீரமைப்புக்கு தடையேற்படுத்த வேண்டாம் என்று குறிப்பிட்டுக்கொள்கிறேன்.இலங்கை மின்சார சபையின் சேவையாளர்களில் ஒரு தரப்பினர் சட்டப்படி வேலையில் ஈடுபடுகிறார்கள், சுகயீன விடுமுறை போராட்டத்திலும் ஈடுபடுகிறார்கள்.போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் ஈடுபடட்டும்.
நாங்கள் ஆட்சிக்கு வரும் போது மின்சார சபை தொடர்பான சட்டம் இயற்றப்பட்டிருந்தது. அந்த சட்டம் நாட்டின் வலுசக்தி இறையாண்மைக்கும், மின்சார சபையின் சேவையாளர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் அமைந்தது.இந்த சட்டத்தை நாங்கள் திருத்தம் செய்தோம்.பழையதை திருத்தம் செய்தது தவறா,
இலங்கை மின்சார சபை தொடர்பில் மக்கள் மத்தியில் நல்லதொரு நிலைப்பாடு கிடையாது.சுமார் 26 ஆயிரம் சேவையாளர்கள் மின்சார சபையில் உள்ளார்கள். பிரச்சினைகள் உள்ளது.ஆனால் பிரச்சினைகளுக்கு பொறுப்புக் கூறுபவர்கள் எவருமில்லை.சிறந்த கட்டமைப்பை உருவாக்குவதற்காகவே மின்சார சபையை நான்கு நிறுவன கட்டமைப்பின் கீழ் கொண்டு வருவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மின்சார சபையின் சேவையாளர்கள் இந்த 4 நிறுவனங்களில் ஒரு நிறுவனத்தில் சேவையாற்ற முடியும்.அவ்வாறு இல்லாவிடின் சுய விருப்பத்தின் அடிப்படையில் சேவையில் இருந்து விலக முடியும். 9 முதல் 50 இலட்சம் ரூபாய் வரையில் நட்டஈடு வழங்கப்படும்.இந்த தீர்மானத்தை மாற்ற முடியாது.சிறந்த மாற்றத்துக்கு ஒத்துழையுங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன் என்றார்.





