இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ஈரான் வெளியுறவு அமைச்சருடன் பேச்சு
ரூ.2 லட்சம் செலுத்திய மூவரும் வெள்ளிக்கிழமை இரவு 9 மணியளவில் பேசாலை மாவட்டத்தில் இருந்து புறப்பட்டு அதிகாலை 4 மணிக்கு மணல் திட்டை அடைந்ததாகவும், பின்னர் தமிழ்நாடு வழியாக ஐரோப்பிய நாடு ஒன்றுக்குச் செல்ல திட்டமிட்டிருந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழகத்திற்குள் கடல் வழியாக ஊடுருவ முயன்ற இலங்கையர்கள் இருவர், சிங்களவர் ஒருவர், இலங்கைத் தமிழர் என 3 பேரை இந்தியக் கடலோரக் காவல்படைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
அதிகாலை 4 மணியளவில், நான்காவது மணல் மேட்டில் சிக்கித் தவித்த மூன்று பேரை அதிகாரிகள் கண்டுபிடித்துத் தடுத்து நிறுத்தினர். விசாரணையில், அவர்கள் தங்களை சுமித் ரோலன் பெர்னாண்டோ, சஹாரா குணதிலகா (சிங்களவர்) மற்றும் இலங்கைத் தமிழரான கபிலன் என அடையாளம் காட்டினர்.
ரூ.2 லட்சம் செலுத்திய மூவரும் வெள்ளிக்கிழமை இரவு 9 மணியளவில் பேசாலை மாவட்டத்தில் இருந்து புறப்பட்டு அதிகாலை 4 மணிக்கு மணல் திட்டை அடைந்ததாகவும், பின்னர் தமிழ்நாடு வழியாக ஐரோப்பிய நாடு ஒன்றுக்குச் செல்ல திட்டமிட்டிருந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
கபிலன் ஏற்கனவே போதைப்பொருள் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டு தற்போது பிணையில் வெளியே வந்துள்ளார். இந்த இரு சிங்களவர்களும் போதைப்பொருள் மாபியாவுடன் தொடர்புடைய குற்றப் பதிவுகளையும் கொண்டுள்ளனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.