அமெரிக்க தீர்வை வரி 20 சதவீதமாக குறைப்பு
கடந்த ஏப்ரல் மாதத்தில், டொனால்ட் டிரம்ப் தனது புதிய வர்த்தகக் கொள்கையின் ஒரு பகுதியாக இலங்கை இறக்குமதிகளுக்கு 44 சதவீத வரியை விதித்தார். எனினும் அந்த அறிவிப்பானது 90 நாட்களுக்கு இடைநிறுத்தப்பட்டது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பினால் இலங்கையின் ஏற்றுமதிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த 30 சதவீத தீர்வை வரி 20 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இதற்கான நிர்வாக உத்தரவில் அமெரிக்க ஜனாதிபதி கையெழுத்திட்டுள்ளதாக வெள்ளை மாளிகை உறுதிப்படுத்தியுள்ளது. இது இலங்கையின் பொருளாதாரம் மற்றும் ஏற்றுமதி வர்த்தகத்தில் ஆறுதல் நிலையை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதத்தில், டொனால்ட் டிரம்ப் தனது புதிய வர்த்தகக் கொள்கையின் ஒரு பகுதியாக இலங்கை இறக்குமதிகளுக்கு 44 சதவீத வரியை விதித்தார். எனினும் அந்த அறிவிப்பானது 90 நாட்களுக்கு இடைநிறுத்தப்பட்டது.
தொடர்ந்து இலங்கையும் அமெரிக்காவும் பேச்சுவார்த்தைகளை நடத்தின. இலங்கையில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் குழு வொஷிங்டனுக்கு விஜயம் செய்து அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். மெய்நிகர் வழியாகவும் அமெரிக்கத் தரப்புடன் இலங்கை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
தொடர்ந்து மூன்று மாத நிறைவில் ஜூலை மாதம் 2 ஆம் திகதி இலங்கை அமெரிக்காவுக்கு செய்கின்ற ஏற்றுமதிக்கு 30 சதவீத வரி அறவிடப்படும் என அமெரிக்காவினால் அறிவிக்கப்பட்டது. ஏற்கனவே விதிக்கப்பட்டிருந்த 44 வீத வரி 30 வீதமாகக் குறைக்கப்பட்டது.
ஆனால் அதனையும் தம்மால் தாங்கிக் கொள்ள முடியாது என்று இலங்கையின் அமெரிக்காவுக்கான ஏற்றுமதியாளர்கள் தெரிவித்தனர்.
அமெரிக்காவுடன் தொடர்ந்து இலங்கை தரப்பினர் பேச்சுவார்த்தைகளை நடத்தினர். ஒருகட்டத்தில் இலங்கையும் அமெரிக்காவும் ஒரு வர்த்தக உடன்படிக்கையை செய்வதாகவும் அறிவிக்கப்பட்டது.