சிறிலங்காவின் ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைக்கு அமெரிக்கா ஆதரவு
சிறிலங்காவின் பாதுகாப்பு மற்றும் பொருளாதாரத்தைப் பலப்படுத்துவதற்கு நிதி மற்றும் தொழில்நுட்ப உதவிகளை வழங்க அமெரிக்கா தயாராக இருப்பதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கும் இடையில் நேற்று (07) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போதே அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவி இராஜாங்கச் செயலாளர் டொனால்ட் லூ சிறிலங்காவில் முன்னெடுக்கப்பட்டுள்ள ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகளுக்குத் தேவையான ஒத்துழைப்பை வழங்க அமெரிக்க அரசாங்கம் அர்ப்பணிப்புடன் இருப்பதாக தெரிவித்தார்.
சிறிலங்காவின் பாதுகாப்பு மற்றும் பொருளாதாரத்தைப் பலப்படுத்துவதற்கு நிதி மற்றும் தொழில்நுட்ப உதவிகளை வழங்க அமெரிக்கா தயாராக இருப்பதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
சிறிலங்காவின் ஊழல் எதிர்ப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக, சட்டவிரோதமாக நாட்டிலிருந்து எடுக்கப்பட்ட நிதியை மீட்டெடுக்க உதவும் தொழில்நுட்ப நிபுணத்துவத்தை வழங்க அமெரிக்க அரசாங்கத்தின் விருப்பத்தையும் அவர் வலியுறுத்தினார்.