அழுத்தத்திற்கு மாஸ்கோ ஒருபோதும் அடிபணியாது: புடின்
அமெரிக்க பொருளாதாரத் தடைகள் குறித்து கருத்து தெரிவித்த அவர், அவற்றை "சில விளைவுகளை" கொண்ட ஒரு "நட்பற்ற" நடவடிக்கை என்று விவரித்தார்.
 
        
ரஷ்ய எண்ணெய் பெருநிறுவனங்கள் மீதான அமெரிக்க பொருளாதாரத் தடைகளுக்கு ஒரு கூர்மையான எதிர்வினையாற்றில், விளாடிமிர் புட்டின் வியாழனன்று வாஷிங்டன் அல்லது வேறு எந்த நாட்டின் அழுத்தத்திற்கு மாஸ்கோ ஒருபோதும் அடிபணியாது என்று அறிவித்தார், ரஷ்ய எல்லைக்குள் ஆழமான எந்தவொரு தாக்குதலும் "மிகவும் தீவிரமான மற்றும் மிகப்பெரிய" விடையிறுப்பைக் கொண்டிருக்கும் என்று எச்சரித்தார் என்று செய்தி நிறுவனமான ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது. அமெரிக்க பொருளாதாரத் தடைகளை ரஷ்ய-அமெரிக்க உறவுகளை பலப்படுத்தாத ஒரு "விரோத நடவடிக்கை" என்று அவர் அழைத்தார்.
அமெரிக்க பொருளாதாரத் தடைகள் குறித்து கருத்து தெரிவித்த அவர், அவற்றை "சில விளைவுகளை" கொண்ட ஒரு "நட்பற்ற" நடவடிக்கை என்று விவரித்தார். ஆனால் அவை அவற்றின் பொருளாதார நல்வாழ்வை கணிசமாக பாதிக்காது என்று வலியுறுத்தினார், மேலும் ரஷ்யாவின் எரிசக்தித் துறை நம்பிக்கையுடன் உள்ளது என்பதையும் சேர்த்துக் கூறினார்.
"இது நிச்சயமாக, ரஷ்யா மீது அழுத்தம் கொடுப்பதற்கான ஒரு முயற்சியாகும்," என்று அவர் கூறினார். "ஆனால் எந்த சுயமரியாதையும் கொண்ட நாடும் சுயமரியாதை கொண்ட மக்களும் அழுத்தத்தின் கீழ் எதையும் முடிவு செய்வதில்லை".





 
  
