மனித செயற்பாடுகளால் 238 யானைகள் மரணம்
பொலன்னறுவை மாவட்டத்தில் 20 மரணங்களும் கிழக்கு மாகாணத்தில் 15 மரணங்களும் அநுராதபுரம் மாவட்டத்தில் 10மரணங்களும் பதிவாகியுள்ளதுடன் பொலன்னறுவை மாவட்டத்திலேயே அதிகளவான மரணங்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
மனித செயற்பாடுகள் காரணமாக இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 238 காட்டுயானைகள் உயிரிழந்துள்ளதாக வனஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இவ்வருடத்தின் ஜுலை மாதம் 22 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியிலேயே காட்டுயானைகள் இவ்வாறு உயிரிழந்துள்ளதாவும் யானை மனித மோதல் காரணமாக நாட்டில் இதுவரை 74 பேர் உயிரிழந்துள்ளதாவும் வனஜீவராசிகள் திணைக்கள தரவுகள் குறிப்பிட்டுள்ளன.
பொலன்னறுவை மாவட்டத்தில் 20 மரணங்களும் கிழக்கு மாகாணத்தில் 15 மரணங்களும் அநுராதபுரம் மாவட்டத்தில் 10மரணங்களும் பதிவாகியுள்ளதுடன் பொலன்னறுவை மாவட்டத்திலேயே அதிகளவான மரணங்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
கிளிநொச்சி, ஊவா மாகாணம்,புத்தளம் மற்றும் பொலன்னறுவை, அநுராதபுரம்,கிழக்கு மாகாணம், வவுனியா, திருகோணமலை, மன்னார் உள்ளிட்ட இடங்களிலேயே மனித செயற்பாடுகள் காரணமாக காட்டுயானைகள் உயிரிழந்துள்ள சம்பவங்கள் பதிவாகியுள்ளதுடன் துப்பாக்கிச்சூடு, மின்சாரம் தாக்கல் மற்றும் ஹக்கபடஸ் (வாய்வெடி ) போன்ற சம்பவங்கள் காரணமாகவே அதிகளவு காட்டுயானைகள் உயிரிழந்துள்ளதாகவும்திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
காட்டுயானைகளை சுட்டுக்கொல்லுதல், சட்டவிரோத மின்கம்பிகளை பயன்படுத்தி யானைகளை கொல்லுதல் மற்றும் ஹக்கபடஸ் (வாய்வெடி)போன்றவற்றினை பயன்படுத்தி காட்டுயானைகளை கொல்லுபவர்களை கைது செய்வதற்காக வேண்டி வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு தகவல்களை வழங்குமாறு பொதுமக்களிடம் திணைக்களம் கோரியுள்ளதோடு இதன் மூலம் காட்டுயானைகளின் இறப்பு வீதத்தினை குறைக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.





