1.4 பில்லியன் டாலர் விலைக்கு வெர்சேசை வாங்க இத்தாலியின் பிராடா முடிவு
ஆடம்பரத் தேவையில் ஏற்பட்ட மந்தநிலையை மீறிப் பிராடா விரிவாக்கம் செய்ய முயன்று வருகிறது.

இத்தாலிய பாணியில் இரண்டு பெரிய பெயர்களை ஒன்றிணைக்கும் நடவடிக்கையில் கேப்ரி ஹோல்டிங்சிடமிருந்து சிறிய போட்டியாளரான வெர்சேசை வாங்க பிராடா ஒரு ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் நிறுவன மதிப்பு 1.375 பில்லியன் டாலர் என்று பிராடா வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.
ஆடம்பரத் தேவையில் ஏற்பட்ட மந்தநிலையை மீறிப் பிராடா விரிவாக்கம் செய்ய முயன்று வருகிறது. அதே நேரத்தில் வெர்சேஸ் நஷ்டத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த இணைப்பு பிரெஞ்சு பெருநிறுவனங்கள் தலைமையிலான ஆடம்பர தொழில்துறையில் இத்தாலியின் கரத்தைப் பலப்படுத்துகிறது.
"வெர்சேசின் பாரம்பரியத்தை அதன் தைரியமான மற்றும் காலமற்ற அழகியலைக் கொண்டாடுவதையும் மறுவிளக்கம் செய்வதையும் தொடர்வதை நாங்கள் நோக்கமாகக் கொண்டுள்ளோம்" என்று பிராடா தலைவர் பாட்ரிசியோ பெர்டெல்லி கூறினார்.
"அதே நேரத்தில், நாங்கள் ஒரு வலுவான தளத்தை வழங்குவோம். இது பல ஆண்டுகளாக நடந்து வரும் முதலீடுகளால் வலுப்படுத்தப்பட்டது என்றும் நீண்டகால உறவுகளில் வேரூன்றியது," என்றும் அவர் மேலும் கூறினார்.