Breaking News
மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஆர்.எஸ்.எஸ் அமைப்பைத் தடை செய்யும்: கர்நாடக அமைச்சர்
சர்தார் படேல் மற்றும் இந்திரா காந்தி ஆகியோரால் ஆர்.எஸ்.எஸ் மீது வரலாற்று தடை விதிக்கப்பட்டதை அவர் குறிப்பிட்டார்.
மத்தியில் ஆர்.எஸ்.எஸ் ஆட்சிக்கு வந்தால் காங்கிரஸ் கட்சியினர் அதை தடை செய்வார்கள் என்று கர்நாடக அமைச்சர் பிரியங்க் கார்கே சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார். ஆர்.எஸ்.எஸ் சமூகத்தில் வெறுப்பை பரப்புவதாகக் கார்கே குற்றம் சாட்டியதோடு, அதன் நிதி ஆதாரங்களையும் கேள்வி எழுப்பினார்.
சர்தார் படேல் மற்றும் இந்திரா காந்தி ஆகியோரால் ஆர்.எஸ்.எஸ் மீது வரலாற்று தடை விதிக்கப்பட்டதை அவர் குறிப்பிட்டார். அரசியலமைப்பிலிருந்து 'மதச்சார்பற்ற' மற்றும் 'சோசலிசம்' என்ற சொற்களை நீக்குவது குறித்து ஆர்.எஸ்.எஸ் தலைவர் ஒருவர் தெரிவித்த கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் இந்த அறிக்கை வந்துள்ளது.





