பிரசன்ன ரணதுங்கவுக்கு எதிரான கப்கம் கோரிய வழக்கு; மீதித் தொகையை செலுத்த அவகாசம்
எதிர்வரும் 2027 பெப்ரவரி 01 ஆம் திகதிக்கு வழக்கை மீள அழைக்குமாறு உத்தரவிட்டார்.
கொலன்னாவ, மீதொட்டமுல்ல பகுதியில் காணியொன்றை சீர்மைப்பதுக்கு அனுமதி வழங்குவதற்காக வர்த்தகர் ஒருவரிடம் 64 மில்லியன் ரூபா கப்பம் கேட்டு அச்சுறுத்தல் விடுத்தாக குற்றம்சாட்டப்பட்ட வழக்கில் குற்றவாளியாகக் காணப்பட்ட முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவுக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட 25 மில்லியன் ரூபா அபராதத் தொகையில் மீதமுள்ள 90 இலட்சம் ரூபா அபராத தொகையை செலுத்துவதற்காக நீதிமன்றத்தில் அவகாசம் கோரப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு 06-11-2026 அன்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க சார்பில் ஆஜரான சட்டத்தரணி, அபராதத் தொகையின் எஞ்சிய பகுதியைக் செலுத்துவதற்கு மேலதிக காலவகாசம் வழங்குமாறு நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்தார்.
மன்றில் முவைக்கப்பட்ட கோரிக்கையை பரிசலித்த மேல் நீதிமன்ற நீதிபதி உதேஷ்ரணதுங்க, எஞ்சிய பணத்தைச் செலுத்துவதற்காக எதிர்வரும் 2027 பெப்ரவரி 01 ஆம் திகதிக்கு வழக்கை மீள அழைக்குமாறு உத்தரவிட்டார்.
கடந்த 2015 ஆம் ஆண்டு ஏப்ரல் 10 ஆம் திகதி மொரட்டுவ பகுதியை சேர்ந்த வர்த்தகர் ஒருவருக்கு காணியை சீரமைப்பதுக்கான அனுமதியை பெற்றுக்கொடுக்க முற்பட்டு 64 மில்லியன் ரூபா பணத்தை கப்பமாக கோரியமை மற்றும் 15 மில்லியன் ரூபாவை மக்களிடம் பெற்றமை தொடர்பில் சட்டமா அதிபரால் இவ்வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இவ்வழக்கை விசாரணைசெய்த கொழும்பு மேல் நீதிமன்றம், கடந்த 2022 ஜூன் 6 ஆம் திகதி பிரசன்ன ரணதுங்கவுக்கு இரண்டு வருட கடூழியச் சிறைத் தண்டனையை விதித்து, அத்தண்டனையை 5 வருடங்களுக்குள் அனுபவிக்குமாறு தீர்ப்பளித்ததுடன், 25 மில்லியன் ரூபா அபராதமும் ஒரு மில்லியன் ரூபா இழப்பீடும் செலுத்துமாறு உத்தரவிட்டிருந்தது.
இதற்கிடையில் குறித்த தீர்ப்பை சவாலுக்குட்படுத்தி பிரசன்ன ரணதுங்க சார்பில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. எனினும், அபராதம் மற்றும் இழப்பீடு தொகையைச் செலுத்தக் கால அவகாசம் வழங்கப்பட்டால் மேன்முறையீட்டு மனுவை மீள பெறத் தயார் என ஜனாதிபதி சட்டத்தரணி ஃபைஸ் முஸ்தபா குறிப்பிட்டதை அடுத்து, மனுவை மீள பெற நீதிமன்றம் அனுமதி வழங்கியமை குறிப்பிடத்தக்கது.





