நாடளாவிய ரீதியில் 40,000 ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ளது: பிரதமர் ஹரிணி
எதிர்க்கட்சி உறுப்பினர் முஜிபுர் ரஹுமான் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே பிரதமர் இந்த கருத்துக்களை பாராளுமன்றத்தில் புதன்கிழமை (21) தெரிவித்தார்.
நாடு முழுவதும் தற்போது 40,000 ஆசிரியர்கள் பற்றாக்குறை நிலவுவதாகவும், இந்த ஆண்டு இறுதிக்குள் தேவையான பணியாளர்களை ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் இணைத்துக்கொள்ள அரசாங்கம் எதிர்பார்ப்பதாகவும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
எதிர்க்கட்சி உறுப்பினர் முஜிபுர் ரஹுமான் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே பிரதமர் இந்த கருத்துக்களை பாராளுமன்றத்தில் புதன்கிழமை (21) தெரிவித்தார்.
"தற்போது அரசாங்க பாடசாலைகளில் தரம் 1 முதல் 5 வரையான தரங்களுக்கு சிங்கள மொழி மூலத்தில் 4,240 ஆசிரியர் வெற்றிடங்களும் தமிழ் மொழி மூலத்தில் 2,827 ஆசிரியர் வெற்றிடங்களும் உள்ளன. தரம் 6 தொடக்கம் 11 வரையான சிங்கள மொழி மூலத்தில் 11,274 வெற்றிடங்களும் தமிழ் மொழி மூல ரீதியில் 6,121 வெற்றிடங்களும் உள்ளன.
மேல் மாகாணத்தில் மாத்திரம், அரசாங்க பாடசாலைகளில் 1 முதல் 5 வரையான வகுப்புகளுக்கு 1,310 சிங்கள மொழி மற்றும் 302 தமிழ் மொழி மூல ஆசிரியர் பற்றாக்குறையும் நிலவுவதாக அறிவிக்கின்றன. தரம் 6 முதல் 11 வரையான வகுப்புகளில் சிங்கள மொழி மூல ஆசிரியர்களுக்கு 1,325 பேரும் தமிழ் மொழி மூல ஆசிரியர்களுக்கு 397 வெற்றிடங்களும் உள்ளன. ஒட்டுமொத்தமாக, நாடு முழுவதும் 40,000 ஆசிரியர்கள் காலியிடங்கள் உள்ளன என்றார்.





