எனது தனிப்பட்ட இலாபத்துக்காக செயற்படவில்லை: ரணில் விக்கிரமசிங்க
முன்னாள் ஜனாதிபதி ரணில், தான் கைது செய்யப்படுவதற்கு முன்னர் நாட்டு மக்களுக்கு ஒரு விடயத்தைக் கூற விரும்புவதாகவும், எனவே தான் கூறுவதை குரல் பதிவு செய்து மக்களுக்கு தெரியப்படுத்துமாறும் கூறியதாக அகிலவிராஜ் காரியவசம் இதன் போது தெரிவித்தார்.
நான் எல்லா சந்தர்ப்பங்களிலும் நாட்டுக்காகவே செயற்பட்டேன். மாறாக எந்தவொரு சந்தர்ப்பத்திலும் எனது தனிப்பட்ட இலாபத்துக்காக செயற்படவில்லை என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். கைது செய்யப்படுவதற்கு முன்னர் நாட்டுக்கு மக்களுக்கு கூற விரும்புவதாக அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
கொழும்பு – பிளவர் வீதியில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அரசியல் அலுவலகத்தில் 23-08-2025 அன்று விசேட ஊடகவியலாளர் மாநாடு இடம்பெற்றது. குறித்த ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்ட ஐக்கிய தேசிய கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் அகிலவிராஜ் காரியவசம் தொலைபேசி குரல் பதிவொன்றை ஒலிபரப்பினார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில், தான் கைது செய்யப்படுவதற்கு முன்னர் நாட்டு மக்களுக்கு ஒரு விடயத்தைக் கூற விரும்புவதாகவும், எனவே தான் கூறுவதை குரல் பதிவு செய்து மக்களுக்கு தெரியப்படுத்துமாறும் கூறியதாக அகிலவிராஜ் காரியவசம் இதன் போது தெரிவித்தார்.
அந்த குரல் பதிவில், 'நான் எல்லா சந்தர்ப்பங்களிலும் நாட்டுக்காகவே செயற்பட்டேன். தனிப்பட்ட இலாபங்களுக்காக எந்த சந்தர்ப்பத்திலும் செயற்பட்டதில்லை. இந்த அரசாங்கத்தின் உண்மையான முகம் இப்போது தான் வெளிப்படுவதாகத் தோன்றுகிறது. அனைத்து துறைகளிலும் இடம்பெறும் இந்த அரசியல் பழிவாங்கல்களை நான் ஏற்றுக் கொள்ளவில்லை.' என முன்னாள் ஜனாதிபதி ரணில் மேலும் தெரிவித்திருந்தார்.





