இலங்கை நம்பிக்கைக்குரிய பங்காளி ; ரில்வினிடம் ஜெய்சங்கர் தெரிவிப்பு
இலங்கைக்கும் - இந்தியாவுக்கும் இடையிலான ஆழமான மற்றும் வலுவான நட்பை மேலும் வலுப்படுத்தும் வகையில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது.
நம்பிக்கைக்குரிய பங்காளி என்ற வகையில்,இலங்கையின் முன்னேற்றத்திற்கும் செழுமைக்கும் இந்தியா தொடர்ந்து ஆதரவளிக்கும்.மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வாவுடனான சந்திப்பு இருநாடுகளின் ஆழமான நட்பை மேலும் வலுப்படுத்தியுள்ளது என இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா உட்பட பிரதிநிதிகள் குழுவினர் இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரை நேற்று சந்தித்து, இருதரப்பு கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.
இந்த சந்திப்பு குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தனது உத்தியோகப்பூர்வ எக்ஸ் வலைத்தளத்தில் 'மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா மற்றும் அவரது பிரதிநிதிகள் குழுவினரை சந்தித்ததையிட்டு மகிழ்ச்சியடைந்தேன்.
இலங்கைக்கும் - இந்தியாவுக்கும் இடையிலான ஆழமான மற்றும் வலுவான நட்பை மேலும் வலுப்படுத்தும் வகையில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது.
நம்பிக்கைக்குரிய பங்காளி என்ற வகையில், இலங்கையின் முன்னேற்றத்திற்கும் செழுமைக்கும் இந்தியா தொடர்ந்து ஆதரவளிக்கும்.' என்று பதிவேற்றம் செய்துள்ளார்.





