Breaking News
சப்ரகமுவ மாகாண ஆளுநராக நவீன் திசாநாயக்க நியமனம்
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் அவர் பதவிப் பிரமாணம் செய்து கொண்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
சப்ரகமுவ மாகாணத்தின் புதிய ஆளுநராக முன்னாள் அமைச்சர் நவீன் திசாநாயக்க நேற்று (ஜூன் 13) நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் அவர் பதவிப் பிரமாணம் செய்து கொண்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
நாட்டின் அபிவிருத்தியை இலக்காகக் கொண்ட ஜனாதிபதி விக்ரமசிங்கவின் திட்டங்கள் மற்றும் அரசாங்க கொள்கைகளை நனவாக்குவதற்கு கணிசமான பங்களிப்பை வழங்குவதற்கு தனது அர்ப்பணிப்பையும் திசாநாயக்க வெளிப்படுத்தியதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.





