சுவிட்ஸர்லாந்து தேசிய பேரவையின் 2 ஆவது துணைத்தலைவராக இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட ஃபரா ரூமி
1991 ஆம் ஆண்டு கொழும்பில் பிறந்து, பின்னர் 1998 ஆம் ஆண்டு சுவிட்ஸர்லாந்துக்கு புலம்பெயர்ந்த ஃபரா ரூமி, தொழில் தேர்ச்சிபெற்ற தாதியாவார்.
சுவிட்ஸர்லாந்து தேசிய பேரவையின் இரண்டாவது துணைத்தலைவராக இலங்கையைப் பூர்வீகமாகக்கொண்ட ஃபரா ரூமி முகைதீன் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
சுவிட்ஸர்லாந்து கூட்டாட்சிப் பாராளுமன்றத்தின் 2025ஃ 2026 ஆம் ஆண்டுக்கான குளிர்கால அமர்வின் தொடக்கத்திலேயே சமூக ஜனநாயகக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஃபரா ருமி சுவிஸ் தேசிய பேரவையின் இரண்டாவது துணைத்தலைவராகத் தேர்வாகியிருக்கின்றார்.
இந்த சுவிஸ் தேசிய பேரவையின் இரண்டாவது துணைத்தலைவர் என்பது சுவிஸ் கூட்டாட்சி ஜனாதிபதி (நிர்வாகத் தலைவர்களின் ஒருவருக்கு ஒருவருடகாலத்துக்கு வழங்கப்படும் பதவி) மற்றும் தேசிய பேரவையின் முதலாவது துணைத்தலைவர் ஆகியோருக்கான நிர்வாக ஒத்துழைப்புக்களை வழங்கும் பதவியாகும்.
1991 ஆம் ஆண்டு கொழும்பில் பிறந்து, பின்னர் 1998 ஆம் ஆண்டு சுவிட்ஸர்லாந்துக்கு புலம்பெயர்ந்த ஃபரா ரூமி, தொழில் தேர்ச்சிபெற்ற தாதியாவார்.
2021 ஆம் ஆண்டு சுவிட்ஸர்லாந்தில் நேரடிய அரசியலுக்குள் பிரவேசித்த ஃபரா ரூமி, சுவிஸ் தேசிய பேரவையின் இரண்டாவது துணைத்தலைவர் பதவிக்குத் தேர்வான இலங்கையைப் பூர்வீகமாகக்கொண்ட முதலாவது பெண் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.





