Breaking News
தொழிற்சட்டங்களை திருத்த 17பேர் கொண்ட குழு நியமனம்
குறித்த குழுவானது தொழில் அமைச்சின் செயலாளரின் தலைமையில் 17பேரை அங்கத்தவர்களாக கொண்டுள்ளது.
நாட்டின் தொழிற் சட்டங்களில் தேவையான திருத்தங்களை மேற்கொள்வதற்காக 17 உறுப்பினர்களைக் கொண்ட சிறப்புக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகத் தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
இது குறித்து மேலும் அவர் தெரிவிக்கையில், தொழிலாளர் நலன் மற்றும் தொழில் சட்டங்களை மறுசீரமைப்பதை முதன்மையான நோக்கமாகக் கொண்டு குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது. குறித்த குழுவானது தொழில் அமைச்சின் செயலாளரின் தலைமையில் 17பேரை அங்கத்தவர்களாக கொண்டுள்ளது.
தயாரிக்கப்பட்டுள்ள சில ஆரம்பக் கட்ட வரைபுகள் ஏற்கனவே தேசிய தொழிலாளர் ஆலோசணை சபையில் வழங்கப்பட்டுள்ளது. இந்தச் சட்டத் திருத்தங்கள் தொடர்பாகத் தொழிற்சங்கங்களின் கருத்துக்களைப் பெற்றுக் கொள்வதற்காக அவர்களுடன் விரிவான பேச்சுவார்த்தைகளை நடத்தப்படவுள்ளன என்றார்.





