2.5 மில்லியன் டொலர் மோசடி - 5 பேருக்கு வெளிநாட்டு பயணத்தடை
குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் சேனாரத்னவினால் இது தொடர்பிலான முதல் தகவல் அறிக்கை 28-04-2026 அன்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
மத்திய வங்கியின் வெளிநாட்டு வள திணைக்களத்தின் கீழ் 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மோசடியான முறையில் பிரிதொரு தரப்புக்கு மாற்றப்பட்டிருக்கின்றமை தொடர்பிலான விசாரணைகள் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக கோட்டை நீதிவான் இசுரு நெத்திகுமாரவுக்கு அறிவிக்கப்பட்டது.
குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் சேனாரத்னவினால் இது தொடர்பிலான முதல் தகவல் அறிக்கை 28-04-2026 அன்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதன்போதே இது தொடர்பிலான விடயங்கள் நீதிமன்றத்திற்குத் தெளிவுபடுத்தப்பட்டன.
அதன்படி இந்த மோசடி நடவடிக்கைக்காக பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் மின்னஞ்சல் முகவரியோடு நேரடியாகத் தொடர்புபட்ட ஐந்து பேருக்கு வெளிநாடு செல்ல தடை விதித்த நீதிமன்றம், அவர்களின் வங்கி கணக்கைப் பெற்று உடனடியாக விசாரணைகளை முன்னெடுக்கவும் குற்றப்புலனாய்வு திணைக்களம் முன்வைத்த கோரிக்கைக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டது.





