அமைச்சர் விஜித்த ஜேர்மன், ருமேனியாவுக்கு விஜயம்
மார்ச் 02, திங்கட்கிழமை அன்று அமைச்சர் ருமேனியாவிற்கு விஜயம் செய்யவுள்ளார். அங்கு ருமேனிய வெளிவிவகார அமைச்சர் ஓனா சில்வியா டோயுவுடன் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து அவர் ஆலோசனைகளை நடத்தவுள்ளார்.
வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் அடுத்த வாரம் ஜேர்மனி மற்றும் ருமேனியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயங்களை மேற்கொண்டு பல உயர்மட்ட சந்திப்புகளில் கலந்துகொள்ளவுள்ளார்.
எதிர்வரும் பெப்ரவரி 27ஆம் திகதி வெள்ளிக்கிழமை அன்று ஜேர்மனிக்கு பயணமாகும் அவர், அங்கு அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் டொக்டர் ஜோஹான் வடேபுல்லைச் சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்துவார்.
அத்துடன், ஜேர்மனியின் பிரேமன் நகருக்குச் செல்லும் அமைச்சர், அங்கு முக்கிய தொழிலதிபர்களைச் சந்தித்து வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் மற்றும் சுற்றுலாத்துறை மேம்பாடு குறித்து கலந்துரையாடல்களை முன்னெடுக்கவுள்ளார்.
அதனைத் தொடர்ந்து, மார்ச் 02, திங்கட்கிழமை அன்று அமைச்சர் ருமேனியாவிற்கு விஜயம் செய்யவுள்ளார். அங்கு ருமேனிய வெளிவிவகார அமைச்சர் ஓனா சில்வியா டோயுவுடன் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து அவர் ஆலோசனைகளை நடத்தவுள்ளார்.
இந்தச் சந்திப்புகளின் போது குறிப்பாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு வசதிகளை உருவாக்குதல் மற்றும் இருநாடுகளுக்கும் இடையிலான சுற்றுலாத்துறையை ஊக்குவித்தல் போன்ற விடயங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.





