முன்னாள் ஜனாதிபதிகளின் உரித்துக்களை நீக்குதல் சட்டமூலத்துக்கு எதிராக 6 மனுக்கள்
பாராளுமன்றம் 21-08-2025 அன்று காலை 9.30 மணிக்கு சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் கூடியது.
முன்னாள் ஜனாதிபதிகளின் உரித்துரிமைகள் (நீக்குதல்) எனும் சட்டமூலம் தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களின் எண்ணிக்கை 6 ஆக அதிகரித்துள்ளது
அரசியலமைப்பின் 121(1) ஆம் உறுப்புரையின் பிரகாரம், 'ஜனாதிபதிகளின் உரித்துரிமைகள்(நீக்குதல்)' எனும் சட்டமூலம் தொடர்பாக உயர்நீதிமன்றத்திற்கு 3 மனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக கடந்த செவ்வாய்க்கிழமை சபாநாயகர் சபைக்கு அறிவித்த நிலையிலேயே உயர்நீதிமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட மேலும் மூன்று மனுக்களின் பிரதிகள் தனக்குக் கிடைத்துள்ளதாக சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன நேற்று வியாழக்கிழமை சபைக்கு அறிவித்தார்.
பாராளுமன்றம் 21-08-2025 அன்று காலை 9.30 மணிக்கு சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் கூடியது. இதனையடுத்து இடம்பெற்ற சபாநாயகர் அறிவிப்பின்போது ' 'ஜனாதிபதிகளின் உரித்துரிமைகள்(நீக்குதல்)' சட்டமூலத்தை சவாலுக்குட்படுத்தி உயர்நீதிமன்றத்துக்கு மேலதிகமாக 3 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் அதன் பிரதிகள் தமக்கு கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் சபைக்கு அறிவித்தார்.





