பேருந்து கட்டணத்தை அதிகரிக்க போவதில்லை - தேசிய போக்குவரத்து ஆணைக்குழு
எதிர்வரும் ஜூலை மாதம் மேற்கொள்ளப்படவிருக்கும் வருடாந்த பேருந்து கட்டண திருத்தத்திற்கு முன்னதாக இந்த இடைக்கால திருத்தத்தை அமல்படுத்த வேண்டும்.
எரிபொருள் விலையேற்றத்துக்கமைய பேருந்து கட்டணங்களில் எந்தவொரு திருத்தமும் மேற்கொள்ளப்பட மாட்டாது.இடைக்கால கட்டண திருத்தத்தை அமல்படுத்த வேண்டிய அவசியம் கிடையாது என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மாதாந்த எரிபொருள் விலைச் சூத்திரத்துக்கமை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் எரிபொருள் விலையை அதிகரித்தது..இதற்கமைய பேருந்து கட்டணங்களை அதிகரிக்க வேண்டும் என்று பேருந்து உரிமையாளர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்திருந்தனர்.
எதிர்வரும் ஜூலை மாதம் மேற்கொள்ளப்படவிருக்கும் வருடாந்த பேருந்து கட்டண திருத்தத்திற்கு முன்னதாக இந்த இடைக்கால திருத்தத்தை அமல்படுத்த வேண்டும். அதன்படி, வரும் ஜூன் மாதம் 2ஆம் திகதி முதல் அமலுக்கு வரும் வகையில் 5 சதவீத கட்டண உயர்வை அவர்கள் எதிர்பார்ப்பதாக அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேவர்தன தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.
எரிபொருள் விலை அதிகரிப்பு சதவீதம் மற்றும் வருடாந்த கட்டண திருத்தம் ஆகியவற்றை கருத்திற் கொண்டு இடைக்கால கட்டண திருத்தத்துக்கு அனுமதி வழங்க போவதில்லை என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவித்துள்ளது.





