அரசாங்க நிதி பற்றிய குழுவில் முன்னிலையாக முடியாது - திறைசேரி செயலாளர்
இது குறித்த அரசாங்கத்தின் அறிவிப்பு பாராளுமன்றத்தில் வெளியிடப்பட்டதன் பின்னர், இவ்விடயம் குறித்து கலந்துரையாடுவது மிகவும் பொருத்தமானதாக இருக்கும்.
2.5 மில்லியன் மோசடி விவகாரம் குறித்து எதிர்வரும் 05-05-2026 அன்று பாராளுமன்றத்துக்கு தெளிவுப்படுத்த தெளிவுபடுத்த அரசாங்கம் உத்தேசித்துள்ளது. ஆகவே அதன் பின்னர் இவ்விடயம் குறித்துக் கலந்துரையாடுவது மிகவும் பொருத்தமானதாக இருக்குமென திறைசேரியின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியபெரும அரசாங்க நிதிப் பற்றிய குழுவின் செயலாளருக்கு எழுத்து மூலமாக அறிவுறுத்தியுள்ளார்.
அரசாங்க நிதி பற்றிய குழுவுக்கு 29-04-2026 அன்று முன்னிலையாகுமாறு அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவர் ஹர்ஷ டி சில்வா நேற்று முன்தினம் உத்தியோகபூர்வமாக அழைப்பு விடுத்த கடிதத்துக்கு பதிலளிக்கும் வகையில் திறைசேரியின் செயலாளர் தனது பதிலை கடிதம் ஊடாக அனுப்பி வைத்துள்ளார்.
அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, 2026.04.28 ஆம் திகதியன்று அனுப்பிவைக்கப்பட்ட கடிதத்துக்கு அமைவாகவே இந்த அறிவிப்பை விடுக்கிறேன்.
2.5 மில்லியன் மோசடி விவகாரம் குறித்து எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (5) பாராளுமன்றத்துக்கு தெளிவுப்படுத்த தெளிவுபடுத்த அரசாங்கம் உத்தேசித்துள்ளது. எனவே, இது குறித்த அரசாங்கத்தின் அறிவிப்பு பாராளுமன்றத்தில் வெளியிடப்பட்டதன் பின்னர், இவ்விடயம் குறித்து கலந்துரையாடுவது மிகவும் பொருத்தமானதாக இருக்கும்.
அரசாங்கத்தின் அறிவிப்புக்குப் பிறகு இக்கூட்டத்தை நடத்துவதற்குத் தேவையான மறுசீரமைப்புகளைச் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.இது தொடர்பான கனிவான புரிதலுக்கு எமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.





