Breaking News
இலங்கையில் மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ள 19 பெண்கள்
24 பெண்கள் தற்போது ஆயுள் தண்டனை அனுபவித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் தற்போது மொத்தம் 19 பெண்கள் மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ளனர் என்று சிறைச்சாலைகள் ஊடகப்பேச்சாளர் ஜகத் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
மேலும் 24 பெண்கள் தற்போது ஆயுள் தண்டனை அனுபவித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
225 பெண்கள் தண்டனை பெற்ற கைதிகள் என்றும் 1,304 பெண்கள் தடுப்புக் காவலில் உள்ளனர்.
இலங்கை முழுவதும் உள்ள 10 சிறைகளில் உள்ள 1,529 பெண்களில் இவர்களும் அடங்குவர் என்று ஜகத் வீரசிங்க தெரிவித்துள்ளார்.