மக்கள் மண்டபத்தில் நடைபெற்ற கௌரவிப்பு நிகழ்வில் பிரதமர் ஹரிணி அமரசூரிய பங்கேற்பு
இந்த நிகழ்வின் ஓர் அங்கமாக, இரு நாடுகளுக்கும் இடையிலான மரியாதை மற்றும் நட்புறவைக் குறிக்கும் வகையில், இலங்கை மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளினதும் தேசிய கீதங்கள் இசைக்கப்பட்டன.

சீனாவிற்கான தனது உத்தியோகபூர்வ விஜயத்தின் ஓர் அங்கமாக, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, 14-10-2025 ஆம் திகதி பீஜிங்கில் அமைந்துள்ள மக்கள் மண்டபத்தில் (Great Hall of the People) நடைபெற்ற கௌரவிப்பு நிகழ்வில் கலந்துகொண்டார்.
இதன்போது, மக்கள் சீனக் குடியரசின் சிரேஷ்ட தலைவர்களால் பிரதமர் அன்புடன் வரவேற்கப்பட்டார். அதையடுத்து, மக்கள் தலைவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் நடைபெற்ற மலர் வளையம் வைத்து கௌரவிக்கும் நிகழ்விலும் பங்கேற்றார்.
இந்த நிகழ்வின் ஓர் அங்கமாக, இரு நாடுகளுக்கும் இடையிலான மரியாதை மற்றும் நட்புறவைக் குறிக்கும் வகையில், இலங்கை மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளினதும் தேசிய கீதங்கள் இசைக்கப்பட்டன.
இந்த விழாவானது, சீனாவின் வரலாற்று மரபுகள் பற்றிய ஒரு முக்கியமான அங்கீகாரத்தை வெளிப்படுத்தியதோடு, இருதரப்பு உறவுகள் மற்றும் பரஸ்பர மரியாதையை வலுப்படுத்துவதற்கான இலங்கையின் தொடர்ச்சியான உறுதிப்பாட்டையும் பிரதிபலித்தது.