பேருந்து கட்டணத்தை குறைக்க முடியாது: தேசிய போக்குவரத்து ஆணைக்குழு
டீசலின் விலையை 06 ருபாவினால் குறைப்பதால் பேருந்து கட்டணத்தை குறைக்க முடியாது என அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.
மாதாந்த எரிபொருள் விலைக்குறைப்புக்கமைய பேருந்து கட்டணத்தை குறைக்க முடியாதென தேசிய போக்குவரத்து ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.அதேபோல் முச்சக்கர வண்டி கட்டணத்தையும் குறைக்க முடியாது என்று அகில இலங்கை முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கம் அறிவித்துள்ளது.
மாதாந்த எரிபொருள் விலைச்சூத்திரத்துக்கமைய 31-08-2025 நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் ஒக்டேன் 92 ரக பெற்றோலின் விலை 06 ரூபாவினாலும்,சுபர் டீசலின் விலை 12 ரூபாவினாலும்,டீசலின் விலை 06 ரூபாவினாலும் குறைக்கப்பட்டது.
டீசலின் விலையை 06 ருபாவினால் குறைப்பதால் பேருந்து கட்டணத்தை குறைக்க முடியாது என அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.வருடாந்த பேருந்து கட்டண திருத்தத்துக்கமைய கடந்த ஜுலை மாதம் திருத்தம் செய்யப்பட்டது. தற்போதைய நிலையில் பேருந்து கட்டணத்தை குறைப்பதாயின் டீசலின் விலை 25 ரூபாவிலேனும் குறைக்க வேண்டும் என்றார்.
பெற்றோலின் விலை பெருமளவில் குறைக்கப்படவில்லை. இலவசமாக பெற்றோலை வழங்கினாலும் முச்சக்கர வண்டி கட்டணத்தை குறைக்க முடியாது ஏனெனில் முச்சக்கர வண்டி கட்டண கண்காணிப்பு தொடர்பில் அரசாங்கத்திடம் முறையான கொள்கைத் திட்டம் ஏதும் கிடையாது என அகில இலங்கை முச்சக்கர வண்டி உரிமையாளர் சங்கத்தின் தலைவர் லலித் தர்மசேகர தெரிவித்தார்.





