Breaking News
தித்வா புயலால் 194 பேர் காணாமல்போயுள்ளனர்
400, 123 குடும்பங்களைச் சேர்ந்த 1 ,398, 036 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தித்வா புயலால் தொடர்ந்தும் 194 பேர் காணாமல் போயுள்ளதோடு, 640 பேர் உயிரழந்துள்ளனர். இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளோர் எண்ணிக்கையும் குறைவடைந்து செல்கிறது.
அந்த வகையில் 13-12-2025 அன்று வரை 25 879 குடும்பங்களைச் சேர்ந்த 83 ,361 பேர் 845 இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும் 400, 123 குடும்பங்களைச் சேர்ந்த 1 ,398, 036 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
108 ,638 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதோடு, 5,794 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.





