உலக சுகாதார ஸ்தாபனத்தின் நிபுணர் குழு வருகை
சுமார் ஆயிரம் இத்தகைய நிலையங்களை அமைக்கும் முன்னோடித் திட்டம் மற்றும் சுகாதார சேவையை டிஜிட்டல் மயமாக்கும் நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் இங்கு விளக்கமளித்தார்.
இலங்கையின் சுகாதாரக் கட்டமைப்பின் முன்னேற்றங்களை மீளாய்வு செய்வதற்கும், அதனை வலுப்படுத்துவதற்கான பரிந்துரைகளை வழங்குவதற்காக நாட்டுக்க வருகை தந்துள்ள உலக சுகாதார ஸ்தாபனத்தின் சர்வதேச நிபுணர் குழுவினர், சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸவை 20-04-2026 அன்று சந்தித்து கலந்துறையாடியிருந்தனர்.
சுகாதார அமைச்சில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில், இலங்கையின் ஆரம்ப சுகாதாரக் கட்டமைப்பை வலுப்படுத்துவதற்காக அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் "ஆரோக்கிய சுகாதார மற்றும் நலன்புரி நிலையங்கள்" வேலைத்திட்டத்தின் முன்னேற்றங்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.
சுமார் ஆயிரம் இத்தகைய நிலையங்களை அமைக்கும் முன்னோடித் திட்டம் மற்றும் சுகாதார சேவையை டிஜிட்டல் மயமாக்கும் நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் இங்கு விளக்கமளித்தார்.
தொற்றா நோய்களைக் கட்டுப்படுத்தல், நோய்களை முன்கூட்டியே கண்டறிதல் மற்றும் கிராமப்புற மக்களுக்குத் தரமான சுகாதார சேவையை வழங்குவதே இந்த நிலையங்களின் நோக்கமாகும். வரையறுக்கப்பட்ட வளங்களைக் கொண்டு அரசாங்கம் முன்னெடுக்கும் இம்முயற்சிகளை நிபுணர் குழுவினர் இதன்போது பாராட்டினர். அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவின் வேண்டுகோளுக்கு இணங்க வருகை தந்துள்ள இந்நிபுணர் குழுவினர், எதிர்வரும் 24 ஆம் திகதி வரை நாட்டில் தங்கியிருந்து ஆய்வுகளை மேற்கொள்ளவுள்ளனர்.
இக்குழுவின் இறுதிப் பரிந்துரைகளை அடிப்படையாகக் கொண்டு, நாட்டின் சுகாதாரச் சேவையை மேலும் வினைத்திறனான மற்றும் மக்கள் மையப்படுத்தப்பட்ட கட்டமைப்பாக மாற்ற எதிர்பார்ப்பதாக அமைச்சர் தெரிவித்தார். இச்சந்திப்பில் உலக சுகாதார ஸ்தாபனத்தின் பிரதிநிதிகள் மற்றும் சர்வதேச மருத்துவ நிபுணர்கள் பலரும் கலந்துகொண்டனர்.





