நீர்வழங்கல் சேவை முழுமையாக சீரானது
சேதமடைந்த நீர்ப்பாசன கட்டமைப்புக்களை துரிதமாகப் புனரமைத்து, எதிர்வரும் போகத்திற்குத் தேவையான நீரை போதுமான அளவில் வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம்.
நாடு முழுவதும் ஏற்பட்ட அனர்த்தங்கள் காரணமாகப் பாதிக்கப்பட்டிருந்த நீர்வழங்கல் சேவை, தற்போது முழுமையாகச் சீரடைந்துள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.
இது தொடர்பில் சபையின் தலைவர், பொறியியலாளர் சந்தன பண்டார ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், அனர்த்தங்களால் சேதமடைந்த நீர்க் கருவிகளுக்கு பதிலாக, புதிய நீர்க் கருவிகளை எந்தவிதக் கட்டணமும் அறவிடாமல் வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சேதமடைந்த நீர்ப்பாசன கட்டமைப்புக்களை துரிதமாகப் புனரமைத்து, எதிர்வரும் போகத்திற்குத் தேவையான நீரை போதுமான அளவில் வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம்.
முப்படையினரின் உதவியுடன் தற்போது உரிய புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றார்.