தென்கொரியாவுக்கு பிரதியமைச்சர் அருண் ஹேமச்சந்திரா பயணம்
சாங்வொன் நகரில், சியோலைத் தவிர்ந்த ஏனைய பகுதிகளில் வசிக்கும் இலங்கையர்களுக்கு ஆவணப்படுத்தல் மற்றும் நலன்சார் சேவைகளை வழங்கும் வகையில் தூதரக நடமாடும் சேவை நடத்தப்படவுள்ளது.
வெளிநாட்டு அலுவல்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதியமைச்சர் அருண் ஹேமச்சந்திர நேற்று முதல் 28 வரை கொரியாவுக்கு அதிகாரப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.
இந்த விஜயத்தின் போது, கொரிய மனிதவள மேம்பாட்டு சேவை நிறுவனம் பிரதிநிதிகள் குழு, கொரிய சிறு மற்றும் நடுத்தர தொழில் கூட்டமைப்பு மற்றும் கொரிய வெளிவிவகார அமைச்சு ஆகியவற்றுடன் கலந்துரையாட திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும் புஷன், டேகு மற்றும் அன்சான் நகரங்களில் தலைமை நிர்வாக அதிகாரிகள் மற்றும் மனிதவள மேலாளர்களுடனும் சந்திப்புகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இந்த விஜயத்தின் முக்கிய அம்சமாக, வேலைவாய்ப்பு அனுமதி அமைப்பின் கீழ் கொரிய வேலைதாரர்களை திறமையான இலங்கை தொழிலாளர்களுடன் நேரடியாக இணைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட வேலைவாய்ப்பு மேம்பாட்டு நிகழ்ச்சிகள் இடம்பெறவுள்ளன.
இலங்கை தொழிலாளர்களுக்கான வேலைவாய்ப்பு ஒதுக்கீடுகள் மற்றும் வாய்ப்புகளை விரிவுபடுத்துதல், வேலைதாரர்களின் நம்பிக்கையை வலுப்படுத்துதல், தொழில் துறையின் தேவைகளுடன் பயிற்சி மற்றும் மொழித் திறன்களை ஒத்திசைக்குதல், மேலும் அரசாங்கத்துடன் அரசாங்க நடைமுறைகள் வழியாக ஆட்சேர்ப்பு செயல்முறையின் திறன் மற்றும் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளன.
மேலும் இப் பிரதிநிதிகள் குழுவானது, தொழிற்சாலைகளுக்கும் பயணம் செய்து, பணியிட சூழல்களை சிறப்பாக புரிந்து கொள்ளவும், நிலையான மற்றும் நீண்டகால வேலைவாய்ப்பு கூட்டாண்மைகளை மேம்படுத்தவும் நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளது.
மேலும், சாங்வொன் நகரில், சியோலைத் தவிர்ந்த ஏனைய பகுதிகளில் வசிக்கும் இலங்கையர்களுக்கு ஆவணப்படுத்தல் மற்றும் நலன்சார் சேவைகளை வழங்கும் வகையில் தூதரக நடமாடும் சேவை நடத்தப்படவுள்ளது.
அதேபோல் சாங்வொன், டேகு மற்றும் வண்டொ பகுதிகளில் சமூகக் கூட்டங்களும் திட்டமிடப்பட்டுள்ளன. இக்கூட்டங்கள் மூலம் இலங்கை தொழிலாளர்களுடன் நேரடியாக தொடர்புகொண்டு, அவர்களின் கவலைகளை கேட்டு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.





