நெடுந்தீவு அருகே எல்லை தாண்டி மீன் பிடித்த இந்திய மீனவர்கள் கைது
நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அவர்களை இலங்கை கடற்படையினர் சுற்றி வளைத்து, அங்கிருந்து கலைந்து சென்றனர்.
நெடுந்தீவு அருகே எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் 9 பேரைச் சிறிலங்காக் கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
அவர்கள் இரண்டு படகுகளில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து படகுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் உரிய அனுமதி பெற்று திங்கள்கிழமை 430 படகுகளில் மீன்பிடிக்கச் சென்றனர்.
ஆனால், அவர்கள் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அவர்களை இலங்கை கடற்படையினர் சுற்றி வளைத்து, அங்கிருந்து கலைந்து சென்றனர்.
ஐசக் ராபின், செல்வகுமார் ஆகியோருக்கு சொந்தமான 2 படகுகளை பறிமுதல் செய்ததோடு, அதில் இருந்த 9 மீனவர்களையும் சர்வதேச எல்லையை தாண்டி வந்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட மீனவர்கள் பின்னர் காங்கேசன்துறை கடற்படை முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டு யாழ்ப்பாணம் மீன்பிடித் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு விசாரணையின் பின்னர் சிறையில் அடைக்கப்படவுள்ளனர்.





