பாராளுமன்ற பிரதி செயலாளர் நாயகம் உடனடியாக பணி நீக்கம்
சபாநாயகர், சபைமுதல்வர், எதிர்க்கட்சித் தலைவர், நிதி அமைச்சரின் பிரதிநிதி, பாராளுமன்ற செயலாளர் நாயகம் ஆகியோர் இந்த ஆலோசனைக்குழுவின் உத்தியோகபூர்வ உறுப்பினர்களாக அங்கம் வகிக்கின்றனர்.
பாராளுமன்றத்தின் இரண்டாவது சிரேஷ்ட உத்தியோகத்தரும், பணிக்குழாம் பிரதானியும், பிரதி செயலாளர் நாயகமுமான ஜி.கே.சமிந்த குலரத்ன உடன் அமலுக்கு வரும் வகையில் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
சபாநாயகர் தலைமையில் 23-01-2026 அன்று கூடிய பாராளுமன்ற பணியாளர் ஆலோசனைக்குழு கூட்டத்தின் போது இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
சபாநாயகர், சபைமுதல்வர், எதிர்க்கட்சித் தலைவர், நிதி அமைச்சரின் பிரதிநிதி, பாராளுமன்ற செயலாளர் நாயகம் ஆகியோர் இந்த ஆலோசனைக்குழுவின் உத்தியோகபூர்வ உறுப்பினர்களாக அங்கம் வகிக்கின்றனர்.
சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன, சபைமுதல்வர் பிமல் ரத்நாயக்க, எதிர்க்கட்சித் தலைவரை பிரதிநிதித்துவப்படுத்தி எதிர்கட்சிகளின் பிரதம கொறடாவான கயந்த கருணாதிலக, நிதி அமைச்சரை பிரதிநிதித்துவப்படுத்தி பிரதி நிதியமைச்சரான அனில் பெர்னாண்டோ மற்றும் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹனதீர ஆகியோர் குழுக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
குற்றச்சாட்டுக்கு உள்ளாக்கப்பட்டுள்ள பிரதி செயலாளர் நாயகமான சமிந்த குலரத்னவை குழுவுக்கு அழைத்து அவரிடம் விளக்க காரணிகள் கோராதது தொடர்பில் விசேட கவனம் செலுத்த வேண்டும் என்று நிதியமைச்சரின் பிரதிநிதியான அனில் பெர்னாண்டோவும், எதிர்கட்சித் தலைவரின் பிரதிநிதியான கயந்த கருணாதிலகவும் இதன்போது குறிப்பிட்டுள்ளனர்.
பாராளுமன்ற பிரதி செயலாளர் நாயகமாக சமிந்த குலரத்ன தொடர்பில் மேற்கொண்ட ஆரம்பக்கட்ட விசாரணை| அரசியலமைப்பு சட்டம் மற்றும் நிர்வாக விதிமுறைகளை கடுமையாக மீறுவதாகும் என்று ஒருசில ஊடகங்கள் அறிக்கையிட்டுள்ளன. எவ்வாறாயினும் இந்த பணிநீக்க தீர்மானத்துக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கைகளை பிரதி செயலாளர் நாயகம் சமிந்த குலரத்ன எடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.





