தரம்குறைந்த மருந்துகளை இறக்குமதி செய்யும் மாபியாவுக்கு இடமளிக்க வேண்டாம் - எதிர்க்கட்சித்தலைவர்
மருந்து மாபியா, தொடர்ந்தும் எமது நாட்டின் சுகாதார கட்டமைப்பு, மருந்து கட்டமைப்பை விழுங்கியுள்ளதா என கேட்க விரும்புகிறோம்.
ஐ.டி.எச். வைத்தியசாலையில் மரணித்த இரண்டு நோயாளர்களின் மரணத்துக்கும் தரம் குறைந்த மருந்தே காரண மென தெரியவருகிறது. இந்த மரணங்களுக்கு பொறுப்பு கூறுவது யார் என்று கேட்கிறோம். அத்துடன் நாட்டில் ஏற்பட்டுள்ள அனர்த்த நிலைமைக்கு மத்தியில் தரம் குறைந்த மருந்து பொருட்களை நாட்டுக்குள் கொண்டுவரும் மாபியாவுக்கு இடமளிக்கக் கூடா தென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் 18-12-2025அன்று இடம்பெற்ற நாட்டின் தற்போதைய நிலைமைகள் குறித்து ஆளும் தரப்பினரால் கொண்டுவரப்பட்ட சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து குறிப்பிடுகையில், நாட்டில் ஏற்பட்ட அனர்த்த நிலைமைக்கு மத்தியில் தரம் குறைந்த மருந்து பொருட்கள் தடுப்பூசிகள் நாட்டுக்குள் கொண்டுவரும் மாபியாவுக்கு இடமளிக்க முடியாது. ஐ,டி.எச். வைத்தியசாலையில், வாந்தி மற்றும் மயக்க நிலையை கட்டுப்படுத்துவதற்கு நோயாளர்களுக்கு வழங்கப்படும் தடுப்பூசியின் தரம் குறைந்துள்ளதன் மூலம் நோயாளர்கள் இரண்டுபேர் மரணி்துள்ளதாக தெரியவருகிறது. தரம் குறைந்த மருந்து, தரம் குறைந்த தடுப்பூசியினாலா இந்த சம்பவம் இடம்பெற்றது என கேட்கிறோம். இந்த மரணங்களுக்கு யார் பொறுப்பு கூறவேண்டும்.
மருந்து மாபியா, தொடர்ந்தும் எமது நாட்டின் சுகாதார கட்டமைப்பு, மருந்து கட்டமைப்பை விழுங்கியுள்ளதா என கேட்க விரும்புகிறோம். அதனால் நாட்டின் தற்போதைய அனர்த்த நிலைமையில், நாடு என்றவகையில் ஒன்றாக கை கோர்த்துக்கொண்டு, அனைவரும் ஒன்றிணைந்து, இன,மத குலபேதங்கள் இல்லாமல், நாட்டை வளமான நாடாக மாற்றியமைக்க நாங்கள் கை கோர்த்துக்கொள்வோம்.
இந்த விடயங்களை நாங்கள் வெறும் வார்த்தைகளுக்கு மட்டுப்படுத்தாமல், ஐக்கிய மக்கள் சக்தி, நாட்டை கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்துக்கு கை கோர்த்துக்கொண்டு செயற்பட தயாராக இருக்கிறாேம் என்றார்.





