நிலக்கரி கொள்வனவில் எவ்வித மோசடியும் இடம்பெறவில்லை: வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி
எதிர்க்கட்சியினர் குற்றஞ்சாட்டுவதைப் போன்று நிலக்கரி கொள்வனவில் எவ்வித மோசடியும் இடம்பெறவில்லை.
எதிர்க்கட்சியினர் குற்றஞ்சாட்டுவதைப் போன்று நிலக்கரி கொள்வனவில் எவ்வித மோசடியும் இடம்பெறவில்லை. நிலக்கரி கொள்வனவு தொடர்பான விலைமனுகோரல் குறித்து சட்டமா அதிபரிடம் சட்ட ஆலோசனை கோரப்பட்டுள்ளது என வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி தெரிவித்தார்.
நிலக்கரி கொள்வனவு குறித்து எழுந்துள்ள சர்ச்சை குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது: நிலக்கரி கொள்வனவு தொடர்பில் எதிர்க்கட்சியினர் முன்வைக்கும் குற்றச்சாட்டுக்களை முழுமையாக நிராகரிக்கிறோம். 2023 ஆம் முதல் கடைப்பிடிக்கப்படும் விலைமனுக்கோரலுக்கு அமைவாகவே நிலக்கரிக்கான விலைமனுக்கல் கோரப்பட்டன.
இதுவரையில் இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரியின் தரத்தில் பிரச்சினை காணப்பட்டமை கண்டறியப்பட்டு அதற்குரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு குறித்த நிறுவனத்திடமிருந்து நட்டஈடும் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.அடுத்தக்கட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
நிலக்கரி கொள்வனவில் ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கும், மின்கட்டண உயர்வுக்கும் இடையில் எவ்வித தொடர்பும் கிடையாது. காலாண்டுக்குரிய மின்கட்டணத் திருத்த யோசனையை மின்சார சபை இலங்கைப் பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் முன்வைத்துள்ளது.
மின்கட்டண திருத்த யோசனை குறித்து பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு சட்டத்தின் பிரகாரம் உரிய நடவடிக்கைகளை தற்போது முன்னெடுத்துள்ளது. ஆணைக்குழுவின் செயற்பாடுகளில் தலையிட போவதில்லை.
எதிர்க்கட்சியினர் குற்றஞ்சாட்டுவதைப் போன்று நிலக்கரி கொள்வனவில் எவ்வித மோசடியும் இடம்பெறவில்லை .நிலக்கரி கொள்வனவு தொடர்பான விலைமனுகோரல் குறித்து சட்டமா அதிபரிடம் சட்ட ஆலோசனை கோரப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சியினர் ஒவ்வொரு வாரமும் ஏதாவதொரு போலியான விடயத்தை சமூகமயப்படுத்தவே முயற்சிக்கிறார்கள். எரிவாயு பிரச்சினை முடிவடைந்தவுடன் தற்போது நிலக்கரி விவகாரத்தை கையில் எடுத்துள்ளார்கள் என்றார்.





