நாடளாவிய ரீதியில் 15,000 மண்சரிவு அபாயமுள்ள இடங்கள் அடையாளம்
தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்துக்கு மண்சரிவுகள் தொடர்பில் அறிவிக்கப்படும் சம்பவங்கள், கிராம சேவகர் ஊடாக, பிரதேச செயலாளர்களுக்கு அறிவிக்கப்பட்டு , இறுதியாக மாவட்டச் செயலாளரை சென்றடையும். அதற்கமையவே குறித்த பிரதேசம் தொடர்பான ஆய்வுகள் முன்னெடுக்கப்படும்.
நாடளாவிய ரீதியில் சுமார் 15,000 மண்சரிவு அபாயமுள்ள இடங்கள் அடையாளங் காணப்பட்டுள்ளதாகவும், குறித்த பகுதிகளில் வசிக்கும் சுமார் 5,000 குடும்பங்கள் ஏற்கனவே வேறு பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
எவ்வாறிருப்பினும் மண்சரிவு அபாயம் காணப்படும் பெரும்பாலான பிரதேசங்களில் மக்கள் தொடர்ந்தும் வசித்து வருவதாகவும், அவர் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல வேண்டும் என்றும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.
தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்துக்கு மண்சரிவுகள் தொடர்பில் அறிவிக்கப்படும் சம்பவங்கள், கிராம சேவகர் ஊடாக, பிரதேச செயலாளர்களுக்கு அறிவிக்கப்பட்டு , இறுதியாக மாவட்டச் செயலாளரை சென்றடையும். அதற்கமையவே குறித்த பிரதேசம் தொடர்பான ஆய்வுகள் முன்னெடுக்கப்படும்.
எனவே ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டு தற்போதைய நிலைவரம் குறித்து அறிவிக்கப்படும் வரை மக்கள் அந்த பகுதிகளில் வசிக்காமல் இருப்பதே சிறந்ததாகும் என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.