'ஷிரான் பாசி’க்கின் சகாவுக்கு சொந்தமான 10 கோடி ரூபா சொத்துக்கள் முடக்கம்
10-09-2026 அன்று முதல் அமலுக்கு வரும் வகையில் 14 நாட்களுக்குக் குறித்த சொத்துக்கள் மற்றும் உடமைகள் முடக்கப்பட்டுள்ளன.
தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள சர்வதேச அளவிலான போதைப்பொருள் கடத்தல்கார் என அறியப்ஸபடும் மொஹமட் ஷிரான் பாசிக்கின் நெருங்கிய சகாவான ரணதுங்க ஆரச்சிஸே நலின் அர்ஜுன என்பவரால் சட்டவிரோதமான முறையில் ஈட்ப்பட்ட பணத்தைக் கொண்டு கொள்வனவு செய்யப்பட்ட சுமார் 10 கோடி ரூபா பெறுமதியான சொத்துக்கள் மற்றும் உடமைககளை முடக்குவதற்குச் குற்றவரும்படி விசாரணை பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது.
இதற்கமைய, 10-09-2026 அன்று முதல் அமலுக்கு வரும் வகையில் 14 நாட்களுக்குக் குறித்த சொத்துக்கள் மற்றும் உடமைகள் முடக்கப்பட்டுள்ளன.
விசாரணை அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் போது, குறித்த சந்தேகநபரால் போதைப்பொருள் கடத்தல் மூலம் ஈட்டப்பட்ட பணத்தைக் கொண்டு கொள்முதல் செய்யப்பட்ட சொத்துக்களை வேறு எவருக்கும் விற்பனை செய்வதோ, உரிம மாற்றம் செய்வதோ அல்லது அதில் மாற்றங்களை ஏற்படுத்துவதை தடுத்து, அவற்றை முடக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அதற்கமைய கடவத்த பகுதியில் அமைந்துள்ள 19.90 பேர்ச்சஸ் காணி மற்றும் அதில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இருமாடி வீடு, களனி பகுதியில் அமைந்துள்ள 18 பேர்ச்சஸ் காணி மற்றும் அதில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இருமாடி வீடு ஆகிய சொத்துக்களே இவ்வாறு முடக்கப்பட்டுள்ளன. குறித்த சொத்துக்கள் தொடர்பில் மேல் நீதிமன்றத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளதோடு, இந்த உத்தரவை நீடிப்பதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக குற்றவரும்படி விசாரணை பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.





