லோரெய்னில் உள்ள வீட்டில் துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில் காவல்துறை விசாரணை
காவல்துறையினர் அந்த இளைஞர்களை காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். அவர்கள் இருவரும் ஒன்றாரியோவில் வசிப்பவர்கள்.

பாஸ்செஸ்-லாரன்டைட்ஸ் பிராந்தியத்தில் உள்ள லோரெய்ன் நகராட்சியில் உள்ள ஒரு குடியிருப்புக் கட்டடம், நள்ளிரவில் பல துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களுக்கு இலக்கானது.
லாவல் காவல்துறையினர் வெள்ளிக்கிழமை இரவு சந்தேகத்திற்கிடமான வாகனம் ஒன்றைக் கண்டுபிடித்துச் சோமெடி பவுல்வர்டு வழியாக அதைத் துரத்தினர்.
"ஒன்றாரியோவில் திருடப்பட்ட வாகனத்தை அதிகாரிகள் நிறுத்திய பின்னர், காரில் இருந்தவர்கள் (25 மற்றும் 27 வயதுடைய இரண்டு இளைஞர்கள்) தப்பி ஓட முயன்றனர். ஆனால் காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தினர்" என்று சூரெட் டு கியூபெக் (எஸ்.கியூ) தெரிவித்துள்ளது.
இதையடுத்து, காவல்துறையினர் அந்த இளைஞர்களைக் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். அவர்கள் இருவரும் ஒன்றாரியோவில் வசிப்பவர்கள்.
கைது செய்யப்பட்ட இடத்திற்கு அருகில் ஒரு துப்பாக்கி கண்டுபிடிக்கப்பட்டது. ஒன்றாரியோயின் பெருங்குற்றத்தடுப்புப் பிரிவு இது தொடர்பில் விசாரணையை மேற்கொள்கிறது.