சிறிலங்காவுக்கு 99.5 ஆயிரம் மெட்ரிக் தொன் வெங்காயத்தை ஏற்றுமதி செய்ய இந்திய அரசு அனுமதி
குறிப்பாக மத்திய கிழக்கு மற்றும் சில ஐரோப்பிய நாடுகளில் ஏற்றுமதி சந்தைகளுக்காக பயிரிடப்பட்ட 2,000 டன் வெள்ளை நிற வெங்காயத்தை ஏற்றுமதி செய்ய இந்திய அரசு அனுமதித்துள்ளது.
ஏற்றுமதிக்கு தடை இருந்தபோதிலும், முக்கியமாக மகாராஷ்டிராவிலிருந்து பெறப்பட்ட 99,500 டன் வெங்காயத்தை ஆறு அண்டை நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய அனுமதித்துள்ளதாக இந்திய அரசு சனிக்கிழமை தெரிவித்துள்ளது.
குறிப்பாக மத்திய கிழக்கு மற்றும் சில ஐரோப்பிய நாடுகளில் ஏற்றுமதி சந்தைகளுக்காக பயிரிடப்பட்ட 2,000 டன் வெள்ளை நிற வெங்காயத்தை ஏற்றுமதி செய்ய இந்திய அரசு அனுமதித்துள்ளது.
டிசம்பர் 8, 2023 அன்று, வெங்காய ஏற்றுமதிக்கு இந்தியா தடை விதித்தது.
இந்தியாவின் நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில், "வங்கதேசம், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பூட்டான், பஹ்ரைன், மொரீஷியஸ் மற்றும் சிறிலங்கா ஆகிய ஆறு அண்டை நாடுகளுக்கு 99,150 டன் வெங்காயத்தை ஏற்றுமதி செய்ய அரசாங்கம் அனுமதித்துள்ளது" என்று தெரிவித்துள்ளது.