போர்டின் எஸ்யூவிகள், ஸ்போர்ட்ஸ் கார்கள் மற்றும் பிற வகைகளின் சீன ஏற்றுமதி இடைநிறுத்தம்
"தற்போதைய வரிவிதிப்பின் காரணமாக அமெரிக்காவிலிருந்து சீனாவுக்கான ஏற்றுமதியை நாங்கள் சரிசெய்துள்ளோம்" - ஃபோர்டு
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் கீழ் நடந்து வரும் வர்த்தக பதட்டங்களுக்கு மத்தியில் விதிக்கப்பட்ட பதிலடி வரிவிதிப்புகள் காரணமாகப் போர்டு மோட்டார் நிறுவனம் தனது எஸ்யூவிகள், பிக்கப் டிரக்குகள் மற்றும் ஸ்போர்ட்ஸ் கார்களைச் சீனாவுக்கு ஏற்றுமதி செய்வதை நிறுத்தியுள்ளது என்று வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.
இந்த வாரம், வாகன உற்பத்தியாளரான போர்டு தன் எஃப் -150 ராப்டர்கள், முஸ்டாங்ஸ், மிச்சிகனில் கட்டப்பட்ட ப்ரோன்கோ எஸ்யூவிகள் மற்றும் கென்டக்கியில் தயாரிக்கப்பட்ட லிங்கன் நேவிகேட்டர்களைச் சீன சந்தைக்கு ஏற்றுமதி செய்வதை நிறுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
"தற்போதைய வரிவிதிப்பின் காரணமாக அமெரிக்காவிலிருந்து சீனாவுக்கான ஏற்றுமதியை நாங்கள் சரிசெய்துள்ளோம்" என்று ஃபோர்டு ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.





