Breaking News
ஆறு நீதிபதிகள் பணி இடைநிறுத்தம்
நீதிவான்கள் மற்ரும் மாவட்ட நீதிபதிகள் அறுவரே இவ்வாறு பணி இடைனிறுத்தம் செய்யப்பட்டதாக அந்த ஆணைக் குழு குறிப்பிட்டது.

நாடளாவிய ரீதியில் கடந்த ஒரு வாரத்துக்குள் 6 நீதிபதிகள் பணி இடைனிறுத்தம் செய்யப்பட்டுள்ளனர். பல்வேறு நடத்தை மற்றும் மோசடி குற்றச்சாட்டுக்களின் கீழ் இவர்கள் பணி இடை நிறுத்தல் செய்யப்ப்ட்டுள்ளதாக நீதிச் சேவை ஆணைக் குழு தெரிவித்தது.
நீதிவான்கள் மற்ரும் மாவட்ட நீதிபதிகள் அறுவரே இவ்வாறு பணி இடைனிறுத்தம் செய்யப்பட்டதாக அந்த ஆணைக் குழு குறிப்பிட்டது.
மொறட்டுவை மாவட்ட நீதிபதியாக இருந்த திலின கமகே, மஹியங்கன கங்கானி ரங்கனி கமகே உள்ளிட்ட 3 நீதிபதிகள், தமது கண்காணிப்பு காலத்தின் கீழ் இருந்த 3 நீதிவான்கள் இவ்வாறு பணி இடை நிறுத்தம் செய்யப்ப்ட்டுள்ளார்.
நீதிச் சேவை ஆணைக் குழுவின் தலைவராக பிரதம நீதியர்சர் சுரசேன கடமையாற்றும் நிலையில் இந்த பணி இடை நிறுத்தம் அவ்வாணைக் குழுவினால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.