இஸ்ரேல் படையினரால் அமெரிக்க குடிமகன் சுட்டுக்கொலை
தலையில் துப்பாக்கிச் சூடு நடந்த நிலையில் அந்தப் பெண் நபுலசில் உள்ள ரஃபிடியா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் குடியேற்றங்களை விரிவுபடுத்துவதற்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்ற 26 வயதான அமெரிக்கக் குடிமகன் வெள்ளிக்கிழமை இஸ்ரேலிய துருப்புக்களால் சுட்டுக் கொல்லப்பட்டதாக அதிகாரப்பூர்வ பாலஸ்தீனிய செய்தி நிறுவனமான வாஃபா தெரிவித்துள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து விசாரித்து வருவதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை (ஐ.டி.எஃப்) தெரிவித்துள்ளது. ஆனால், இதுகுறித்து அமெரிக்க தூதரகம் இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.
தலையில் துப்பாக்கிச் சூடு நடந்த நிலையில் அந்தப் பெண் நபுலசில் உள்ள ரஃபிடியா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பின்னர் அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டார் என்று மருத்துவமனையின் தலைவர் ஃபவுட் நஃபா ராய்ட்டர்ஸிடம் தெரிவித்தார். "நாங்கள் அவருக்கு ஒரு மறுவாழ்வு அறுவை சிகிச்சை செய்ய முயற்சித்தோம், ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவர் இறந்துவிட்டார்," என்று அவர் கூறினார்.





