Breaking News
ரங்க திசாநாயக்கவை சேவையிலிருந்து இடைநிறுத்த கோரிக்கை
ஒருங்கிணைந்த கூட்டு எதிர்க்கட்சி இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் 27-05-2026 அன்று முறைப்பாடு ஒன்றைச் சமர்ப்பித்துள்ளது.
இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ரங்க திசாநாயக்கவை சேவையிலிருந்து இடைநிறுத்த கோரியும் தற்போதைய அரசாங்கம் மேற்கொண்டு வரும் பல்வேறு ஊழல் மோசடிகள் மற்றும் முறைகேடான செயற்பாடுகளுக்கு எதிராகவும், சட்டரீதியான நடவடிக்கைகளை எடுக்குமறு வலியுறுத்தி, ஒருங்கிணைந்த கூட்டு எதிர்க்கட்சி இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் 27-05-2026 அன்று முறைப்பாடு ஒன்றைச் சமர்ப்பித்துள்ளது.
இந்த விடயம் தொடர்பாக புதிய மக்கள் முன்னணியின் தலைவர் சுகீஸ்வர பண்டார, ஒருங்கிணைந்த கூட்டு எதிர்க்கட்சியின் ஏனைய கட்சிப் பிரதிநிதிகளுடன் இணைந்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போது, ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகத்தின் செயற்பாடுகள் குறித்துப் பின்வருமாறு தனது கண்டனங்களை முன்வைத்தார்.





