எஸ்.எம்.சந்திரசேனவுக்கு பிணை
இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு மற்றும் பிரதிவாதி தரப்பு சட்டத்தரணிகள் முன்வைத்த விடயங்களை கருத்திற்கொண்ட கொழும்பு பிரதான நீதிவான் தனுஜா லக்மாலி ஜயசுந்தர இதற்கான உத்தரவை பிறப்பித்தார்.

ஊழல் எனும் குற்றத்தை புரிந்துள்ளதாகத் தெரிவித்து இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினரால் கைது செய்யப்பட்ட முன்னாள் பொருளாதார மேம்பாட்டு பிரதி அமைச்சரும் சிறப்புத் திட்ட அமைச்சருமான எஸ்.எம்.சந்திரசேனவை பிணையில் செல்ல கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் அனுமதி அளித்தது. இது குறித்த வழக்கு விசாரணைக்கு வந்த போதே நீதிவான் இதற்கான உத்தரவை பிறப்பித்தார்.
2014 ஆம் ஆண்டு அநுராதபுரத்தைச் சேர்ந்த விவசாயிகளுக்கு நிவாரண விலைகளில் பங்கிடுவதற்காக 25 மில்லியன் ரூபா செலவில் கொள்வனவு செய்யப்பட்ட சோள விதைகளை விநியோகிப்பதில் ஏற்றுக்கொள்ளப்பட்ட நடைமுறைக்கு அப்பால் சென்று அரசியல் இலாபத்தை அடைந்துக் கொள்ளும் நோக்கில் அவற்றை தனது நெருங்கிய சகாக்களுக்கு விநியோகித்தமை ஊடாக ஊழல் ஏனும் குற்றத்தை புரிந்துள்ளதாகத் தெரிவித்து முன்னாள் அமைச்சர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு மற்றும் பிரதிவாதி தரப்பு சட்டத்தரணிகள் முன்வைத்த விடயங்களை கருத்திற்கொண்ட கொழும்பு பிரதான நீதிவான் தனுஜா லக்மாலி ஜயசுந்தர இதற்கான உத்தரவை பிறப்பித்தார்.
இதன்போது இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் சார்பில் மன்றில் ஆஜரான சட்டத்தரணி மன்றில் விடயங்களை முன்வைத்து இந்த விடயம் தொடர்பிலான விசாரணை நடவடிக்கைகள் நிறைவுகட்டத்தை எட்டியுள்ளதாக குறிப்பிட்டார். மேலும் விவசாய அமைச்சின் சில அதிகாரிகளிடம் மாத்திரம் வாக்குமூலம் பெற்றுக்கொள்ளவிருப்பதாக தெரிவித்த அவர் இதற்கமைய பொருத்தமான உத்தரவொன்றை பிறப்பிக்குமாறு மன்றில் கோரிக்கை விடுத்தார்.