ரோஹித்தவின் மகளுக்கு பிணை வழங்கியது நீதிமன்றம்
சந்தேக நபர் நேற்று மத்துகம நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் தலா 2 மில்லியன் ரூபா பெறுமதியான இரு சரீரப்பிணை களில் செல்ல நீதிவான் அனுமதி அளித்தார்.
சட்டவிரோதமாக நாட்டுக்கு இறக்குமதி செய்யப்பட்டு தவறான தரவுகளை சமர்பித்து மோட்டார் வாகன திணைக்களத்தில் பதிவு செய்தமை தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளுக்கு அமைய கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேயகுணவர்தனவின் மகள் ரோசெல் மெலனியை பிணையில் செல்ல மத்துகம நீதிவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
சந்தேக நபர் நேற்று மத்துகம நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் தலா 2 மில்லியன் ரூபா பெறுமதியான இரு சரீரப்பிணை களில் செல்ல நீதிவான் அனுமதி அளித்தார்.
வலான ஊழல் தடுப்பு பிரிவில் நேற்று முன்தினம் சரணடைந்த அவரிடம் விசாரணை அதிகாரிகள் சுமார் 9 மணித்தியாலயங்கள் வாக்குமூலம் பதிவு செய்து அதன் பின்னர் 31-07-2025 அன்று நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர்.
இதனிடையே குறித்த விவகாரம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் விதானகேவின் மகன் ரசிக்க விதானகேவும் அண்மையில் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் விதானவின் மகன் ரசிக விதான தவறான தரவுகளுடன் பதிவு செய்யப்பட்ட ஜீப் தொடர்பாக அண்மையில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
குறித்த ஜீப்பை பரிசோதனை செய்த போது அது சட்டவிரோதமாக நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டு தவறான தரவுகளை சமர்ப்பித்து மோட்டார் போக்குவரத்துத் துறையில் பதிவு செய்யப்பட்டுள்ளமை தெரியவந்தது.
ஜகத் விதானவுக்குச் சொந்தமான தனியார் நிறுவனத்தின் பெயரில் இரண்டாவது முறையாகப் பதிவு செய்யப்பட்டுள்ள இந்த ஜீப்பை அவரது குடும்பத்தினர் பயன்படுத்தியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்தது.
விசாரணையின் போது கைது செய்யப்பட்ட ரசிக விதான பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் மகள் ரோசெல் மெலனி அபேகுணவர்தனவிடமிருந்து அந்த ஜீப்பை வாங்கியதாக வாக்கு மூலம் அளித்திருந்தார்.
அந்த வாக்கு மூலத்தை மையப்படுத்தி மேலதிக விசாரணைகளுக்காக கடந்த 19ஆம் திகதி மதியம் களுத்துறை நாகொடவில் உள்ள ரோசெல் மெலனி அபேகுணவர்தனவின் வீட்டிற்கு வலான மோசடி தடுப்பு சிறப்பு படையினர் சென்றுள்ளனர்.ஆனால் அவரும் அவரது கணவரும் அங்கு இருக்கவில்லை.
அதன்படி வலான மோசடி தடுப்பு சிறப்பு படையினர் முன் வைத்த விடயங்களை ஆரயந்த மத்துகம நீதிவான் முன்னாள் அமைச்சர் ரோஹித அபேகுணவர்தனவின் மகள் மற்றும் மருமகனுக்கு வெளிநாட்டு பயணத் தடையை பிறப்பித்திருந்தார்.
இந்த பின்னணியில் ரோஹித்தவின் மருமகன் மன்றில் முன்னிலையாகிமையடுத்து அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார். இதனையடுத்து அவரது பாராளுமன்ற ரோஹித்தவின் மகளும் பொலிஸில் சரணடைந்ததையடுத்து அவரும் தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.





