மின்சார சபை சேவையாளர்கள் விலை மனுகோரலில் இருந்து விலகல்
இலங்கை மின்சார சபையை மறுசீரமைக்கும் அரசாங்கத்தின் தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மின்சார சபை தொழிற்சங்கத்தினர் கடந்த 4 (செப்டெம்பர்) ஆம் திகதி முதல் சட்டப்படி வேலை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இலங்கை மின்சார சபையை மறுசீரமைக்கும் அரசாங்கத்தின் தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தொழிற்சங்க போராட்டத்தை தீவிரப்படுத்தும் வகையில் இலங்கை மின்சார சபையின் சேவையாளர்கள் 21-09-2025 முதல் பெறுகை மற்றும் விலைமனுகோரல் நடவடிக்கைகளில் இருந்து விலகியுள்ளனர்.
முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளுக்கு அரசாங்கம் உரிய தீர்வினை வழங்காத காரணத்தால் தான் தொழிற்சங்க நடவடிக்கையில் கட்டம் கட்டமாக ஈடுபடுகிறோம்.இனியும் தீர்வளிக்காவிடின் தொடர் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடுவோம் என இலங்கை மின்சார சபை தொழிற்சங்கத்தினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இலங்கை மின்சார சபையை மறுசீரமைக்கும் அரசாங்கத்தின் தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மின்சார சபை தொழிற்சங்கத்தினர் கடந்த 4 (செப்டெம்பர்) ஆம் திகதி முதல் சட்டப்படி வேலை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
மின்சார சபையை மறுசீரமைக்கும் தீர்மானத்தில் முறைசார பரிந்துரைகள் முன்வைப்பு, சம்பள உயர்வு மற்றும் பதவி உயர்வு உள்ளிட்ட 17 கோரிக்கைகயை முன்வைத்து மின்சார சபையின் சேவையாளர்கள் இவ்வாறு தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர்.
சட்டபடி வேலை நடவடிக்கையின் இரண்டாம் கட்டமாக இலங்கை மின்சார சபையின் சேவையாளர்கள் கடந்த 17 மற்றும் 18 ஆம் திகதிகளில் சுகயீன விடுமுறையை பதிவு செய்து மின்சார சபையின் தலைமை காரியாலயத்தின் முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொழிற்சங்க போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்தும் வகையில் மின்சார சேவையாளர்கள் நேற்று நள்ளிரவு முதல் பெறுகை மற்றும் விலைமனுகோரல் உள்ளிட்ட நடவடிக்கைகளில் இருந்து விலகி தமது போராட்டத்தை தொடர்கின்றனர்.
இலங்கை மின்சார சபையின் புதிய சேவையாளர் சங்கத்தின் பிரதான செயலாளர் பியந்த விக்கிமசிங்க குறிப்பிடுகையில்,இலங்கை மின்சார சபை சட்டத்தின் ஊடாக மின்சார சபையை கூறுப்படுத்தி அதன் பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்யும் அரசாங்கத்தின் செயற்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டப்படி வேலை நடவடிக்கையை ஆரம்பித்தோம்.
இரண்டாம் கட்டமாக சுகயீன விடுமுறையில் இருந்தவாறு போராட்டத்தில் ஈடுபட்டோம். கடமை நாட்களில் மாலை 04.30 மணிக்கு பின்னர் எவ்வித வெளியக கடமைகளிலும் ஈடுபட போவதில்லை.பெறுகை மற்றும் விலைமனுகோரல் நடவடிக்கைகளில் ஈடுபடபோவதில்லை.இதற்கும் அரசாங்கம் கவனம் செலுத்தாவிடின் தொடர் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றார்.
இந்த பணிப்புறக்கணிப்பு தொடர்பில் இலங்கை மின்சார சபையின் தேசிய சேவை சங்கத்தின் செயலாளர் அஜித் தேவப்பிரிய குறிப்பிடுகையில், இலங்கை மின்சார சபையின் அதிகாரிகள், சேவையாளர்கள் பெறுகை குழுவுக்கும், விலைமனுகோரல் குழுவுக்கும் செல்லாவிடின் நிறுவனங்களுக்கு கொண்டு வரப்படும் பொறிகள் மற்றும் பண்டங்களின் தரத்தை மதிப்பிட முடியாத நிலை ஏற்படும்.மதீப்பிடுகளை தயாரிப்பதிலும் தாமதம் ஏற்படலாம்.இதனால் மின்சார சபை நட்டமடையும்.
சிலநேரம் மின்துண்டிக்கப்பட்டால் மீள மின்னிணைப்பை வழங்குவதிலும் தாமதம் ஏற்படலாம்.ஆகவே மின்சார சபையின் சேவையாளர்கள் முன்வைத்துள்ள கோரிக்கைக்கு அரசாங்கம் பேச்சுவார்த்தை ஊடாக தீர்வு பெற்றுக்கொடுக்க வேண்டும்.ஜனாதிபதி இவ்விடயத்தில் தலையிட வேண்டும் என்று கோருகிறோம் என்றார்.





