ரணில் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளார்: உயர் நீதிமன்றம் தீர்ப்பு
அவசர கால சட்டத்தை அமல் செய்ததன் ஊடாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மக்களின் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாகவும் இதன்போது நீதிமன்றம் தீர்மானித்தது.

'அரகலய' மக்கள் போராட்டத்தை கட்டுப்படுத்த பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளை சட்டத்தின் கீழ் அப்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் கடந்த 2022 ஜூலை 17 ஆம் திகதி 2288/ 30 ஆம் இலக்க வர்த்தமானி ஊடாக பிறப்பிக்கப்பட்ட அவசரகால விதிமுறைகள் தன்னிச்சையானவை என்றும் அவை சட்ட விரோதமானது எனவும் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
அவசர கால சட்டத்தை அமல் செய்ததன் ஊடாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மக்களின் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாகவும் இதன்போது நீதிமன்றம் தீர்மானித்தது.
ஜனாதிபதிக்கு பதிலாக சட்டமா அதிபர், அப்போதைய ஜனாதிபதி செயலாளர் காமினி செனரத், அதன் பின்னர் ஜனாதிபதி செயலரான சமன் ஏக்கநாயக்க, அப்போதைய பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற ஜெனரல் கமல் குணரத்ன, அப்போதைய பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன, சட்ட மா அதிபர் ஆகியோரை பிரதிவாதிகளாக பெயரிட்டு தாக்கல் செய்யப்பட்ட 5 அடிப்படை உரிமை மீறல் மனுக்களின் தீர்ப்பை அறிவித்தே உயர் நீதிமன்றம் மேற்படி விடயத்தை அறிவித்தது.
பிரதம நீதியரசர் முர்து பெர்ணான்டோவின் இணக்கத்துடன் உயர் நீதிமன்ற நீதியர்சர் யசந்த கோதாகொட இந்த 66 பக்க தீர்ப்பை அறிவித்தார்.
எவ்வாறாயினும் 26 பக்கங்களை உடைய தீர்ப்பொன்றினை எழுதியுள்ள வழக்கை விசாரித்த மூவரட்ங்கிய நீதியரசர் குழாமின் நீதியரசர் அர்ஜுன ஒபேசேகர, குறித்த அவசரகால சட்டம் சட்ட விரோதமானது அல்லவென தீர்ப்பறிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் பெரும்பான்மை நீதியரசர்களின் தீர்மானம் படி முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அரசியல் அமைப்பின் 12 (1) ஆம் உறுப்புரையான 'சட்டத்தின் முன் அனைவரும் சமமானவர்கள், அவர்கள் சட்டத்தினால் சமமாக பாதுகாக்கபப்டுவதற்கு உரித்துடையவர்கள்' என்ற நாட்டு மக்களின் அடிப்படை உரிமயை மீறியுள்ளதாக தீர்ப்பறிவிக்கப்பட்டது.
கடந்த 2022 ஜூலை 17ஆம் திகதி அவசரகால சட்டத்தை அமல்படுத்தியமையால், அரசியலமைப்பில் உறுதி செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக தீர்ப்பளிக்குமாறு 5 மனுக்கள் அடிப்படை உரிமை மீறல் மனுக்களாக உயர் நீதிமன்றத்தில் தக்கல் செய்யப்பட்டன.